Nayanthara - நம்பவைத்து கழுத்தறுத்த இயக்குநர்?.. செம கடுப்பில் இருக்கும் நயன்தாரா?
மும்பை: Nayanthara (நயன்தாரா) ஜவான் படத்தை பார்த்த நடிகை நயன்தாரா இயக்குநர் அட்லீ மீது பெரும் கோபத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்த அட்லீ ராஜாராணி படத்தை முதன்முதலில் இயக்கினார். ஆர்யா, நயன் தாரா உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் மெகா ஹிட்டடித்தது. தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கினார். இவற்றில் பிகிலை தவிர மற்ற இரண்டு படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதுமட்டுமின்றி விஜய்யுடன் அவருக்கு நல்ல கெமிஸ்ட்ரியும் உருவாகிவிட்டது.

ஹிந்தியில் அட்லீ: சூழல் இப்படி இருக்க அட்லீ தனது ஐந்தாவது படத்தையும் விஜய்யை வைத்து இயக்குவதாக இருந்தது. ஆனால் திடீரென பாலிவுட்டுக்கு சென்று ஷாருக்கானை வைத்து இயக்க கமிட்டாகிவிட்டார். படத்துக்கு ஜவான் என பெயரிடப்பட்டுள்ளது. இதில் ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, நயன் தாரா, யோகிபாபு, ப்ரியாமணி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஷாருக்கானே படத்தை தயாரிக்கவும் செய்திருக்கிறார்.
பட்டையை கிளப்பிய ட்ரெய்லர்: படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியானது. அதனை பார்க்கும்போது நிச்சயம் இந்தப் படம் பாலிவுட்டில் பந்தயம் அடிக்கும் என்றும்; ஒரு கமர்ஷியல் படம் எப்படி எடுக்க வேண்டும் என்பதை அட்லீ இதன் மூலம் பாலிவுட்டுக்கு உணர்த்தியிருக்கிறார் என்றும் ரசிகர்கள் கூறிவருகின்றனர். மேலும் ட்ரெய்லர் வெளியான 24 மணி நேரத்திலேயே 100 மில்லியன் பார்வைகளை கடந்தது குறிப்பிடத்தக்கது.
சிங்கிள் பாடல்: அதேபோல் அனிருத் இசையமைத்திருக்கும் வந்த இடம் பாடலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பாடலை கேட்ட ரசிகர்கள்; கண்டிப்பாக இந்தப் படத்துக்கு பிறகு அனிருத் பாலிவுட்டில் பெரிய ரவுண்டு வருவார் என கூறுகின்றனர். அதேபோல் நயன் தாராவுக்கும் பக்கா ஆக்ஷன் காட்சிகள் இருப்பதுபோல் ட்ரெய்லரில் தெரிந்தது. படமானது செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் ரன்னிங் டைம் இரண்டு மணி நேரம் 49 நிமிடங்கள் என்று கூறப்படுகிறது.

கடுப்பில் நயன் : இந்நிலையில் அட்லீ மீது நயன்தாரா சரியான கடுப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தப் படம் ஹிட்டாகும்பட்சத்தில் ஹிந்தியில் பெரிய ரவுண்டு வரலாம் என்ற கணக்கில் இருந்தாராம் நயன்தாரா. அட்லீ தனக்கு நெருங்கிய நண்பர் என்பதால் இந்தப் படத்தில் தனக்கான முக்கியத்துவம் அதிகம் இருக்கும் என நம்பினாராம். அப்படித்தான் ஷூட்டிங்கிலும் அட்லீ காட்சிகளை எடுத்தாராம்.
தற்போது ஜவான் படம் முழுமையாக ரெடியாகியிருக்கிறது. அதனை நயன்தாரா பார்த்தாராம். பார்த்தவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்ததாம். அதாவது நயனுக்கு முக்கியத்துவம் உள்ள காட்சிகளை எல்லாம் அட்லீ எடிட்டில் தூக்கிவிட்டாராம். இதனால் நயன் அவர் மீது பெரும் கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











