Nayanthara - ஃபோட்டோ எடுத்தா ஃபோன உடைச்சிடுவேன் - ஆங்ரி மோடில் நயன்தாரா.. ரசிகர்கள் ஷாக்

திருச்சி: Nayanthara (நயன்தாரா)தன்னை ஃபோட்டோ எடுக்க முயன்ற ரசிகரை உச்சக்கட்ட கோபத்தோடு எச்சரித்ததால் ரசிகர்கள் ஷாக்காகினர்.

ஐயா படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். அதன் பிறகு சில தனிப்பட்ட பிரச்னைகளை சந்தித்த அவர் சினிமாவிலிருந்து சில காலம் ஒதுங்கியிருந்தார். மீண்டும் சினிமாவில் ஆரம்பித்த அவர் தனது இரண்டாவது இன்னிங்ஸில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். அந்தப் படங்களும் ஹிட்டாக நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டார்.

Nayanthara Angry on her fan at Trichy Railway Station

விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்ட நயன்தாரா

நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது அந்தப் படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்தார். தீவிரமாக காதலித்துவந்த விக்கியும், நயனும் கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டனர். அதனையடுத்து வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தனர். ஆனால் வாடகை தாய் விவகாரத்தில் இருவரும் விதிகளை மீறிவிட்டனர் என சர்ச்சை எழ; அரசு சார்பில் தீவிர விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் இருவரும் விதிகளை மீறவில்லை எனவும், 2016ஆம் ஆண்டே பதிவு திருமணம் செய்துகொண்டனர் எனவும் தெரியவந்தது.

Nayanthara Angry on her fan at Trichy Railway Station

நயன் - விக்னேஷ் சிவனின் குழந்தைகள் பெயர்கள்

சமீபத்தில் தங்களது குழந்தைகளின் பெயர்களை வெளியிட்டனர் இருவரும். அதன்படி ஒரு ஆண் குழந்தைக்கு உயிர் ருத்ரோனில் N சிவன் என்றும், மற்றொரு குழந்தைக்கு உலக் தெய்வீக் N சிவன் என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் N என்பது உலகின் சிறந்த தாயான நயன் தாராவை குறிக்கிறது என விக்னேஷ் சிவன் மகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இரண்டு பேரின் பெயர்களும் அருமையாக இருப்பதாக ரசிகர்களும், திரையுலகினரும் நயனுக்கும், விக்கிக்கும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.

குல தெய்வ கோயில் வழிபாடு

இந்நிலையில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் குழந்தைகளுடன் குல தெய்வ வழிபாடு செய்ய தஞ்சைக்கு வந்தனர். விக்னேஷ் சிவனின் குல தெய்வ கோயில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மேல்வளத்தூரில் இருக்கும் ஆற்றங்கரையோரம் ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் ஆகும். எனவே இருவரும் தங்களது குழந்தைகளுடன் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்து அங்கிருந்து கார் மூலம் கோயிலுக்கு சென்றனர். அந்த கோயிலில் வழிபாடை முடித்துவிட்டு தாராசுரம் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தனர். தாராசுரம் கோயிலில் வழிபாடு முடித்துவிட்டு வந்தபோது கல்லூரி மாணவிகள் சிலர் நயனுடன் செல்ஃபி எடுத்தனர். அப்போது ஒரு மாணவியின் கை நயன்தாரா மீது பட கோபமாகி அந்த மாணவியை கோபத்துடன் முறைத்தார்.

Nayanthara Angry on her fan at Trichy Railway Station

ரசிகரிடம் கோபப்பட்ட நயன்தாரா

இதனையடுத்து திருச்சி வந்த இருவரும் ரயிலில் சென்றனர். அப்போது ரயிலுக்குள் ரசிகர்கள் நயன் தாராவை பார்ப்பதற்கு முண்டியடித்தனர். அதில் சிலர் புகைப்படங்கள் எடுக்கவும் முயன்றனர். ஏற்கனவே கடுகடுப்பில் இருந்த நயன்; தன்னை ஃபோட்டோ எடுப்பதை கவனித்து, "ஹே ஃபோட்டோ எடுத்தீங்கனா ஃபோனை உடைச்சிடுவேன்" என காட்டமாக தெரிவித்தார். இதனை கேட்டு அங்கிருந்த ரசிகர்கள் ஷாக்காகினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X