தமிழ் சினிமா வரலாற்றிலேயே... முதல்முறையாக அதிகச் சம்பளம் பெறும் நயன், அனுஷ்கா

சென்னை: தமிழ் சினிமாவிலே இதுவரை எந்த நடிகையும் பெறாத அளவு சம்பளத்தை பெற்று சினிமா வரலாற்றில் தங்களுக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார்கள் நயன்தாராவும், அனுஷ்காவும்.

இருவரது மார்க்கெட்டும் உச்சத்தில் இருப்பதால், அதிக சம்பளத்தைக் கொடுத்து இவர்களைத் தங்களது படத்தில் நடிக்க வைக்கும் முயற்சியில் போட்டி போடுகிறார்களாம் தயாரிப்பாளர்கள்.

தற்போது, நயன்தாரா, அனுஷ்கா சம்பளம் ரூ.2 கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கனவுக் கன்னிகள்...

கனவுக் கன்னிகள்...

இந்தாவு அதிக சம்பளத்தை இதுவரை தமிழிலும் சரி, தெலுங்கிலும் சரி வேறு எந்த நடிகைகளும் பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களின் பேராதரவால், தங்களின் சம்பளத்தை இந்தளவுக்கு உயர்த்தியுள்ளனராம் இவர்கள்.

கர்ப்பிணியாகும் நயன்...

கர்ப்பிணியாகும் நயன்...

தெலுங்கில் நடித்துவரும் ‘அனாமிகா' படத்துக்காக இந்த சம்பளத்தைப் பெறுகிறார் நயன். இப்படம் இந்தியில் ஹிட்டான ‘கஹானி' என்ற படத்தின் ரீமேக். இந்தியில் இந்த கதாபாத்திரத்தை வித்யாபாலன் ஏற்றிருந்தார்.

அள்ளிக் கொடுகும் தயாரிப்பாளர்கள்...

அள்ளிக் கொடுகும் தயாரிப்பாளர்கள்...

கதைப்படி நயனுக்கு கர்ப்பிணி வேடம். கர்ப்பிணியாக நடிப்பதற்காகவே, இவ்வளவு பணத்தை அள்ளிக் கொடுத்திருக்கிறார்களாம் படத்தயாரிப்பாளர்கள்.

அது அந்தக் காலம்....

அது அந்தக் காலம்....

தமிழில் அஜீத் ஜோடியாக ஒரு படத்திலும், ஆர்யா ஜோடியாக ‘ராஜாராணி' படத்திலும் உதயநிதியுடன் ‘இது கதிர்வேலன் காதலி' படத்திலும் நடித்து வருகிரார். ஆனால், இப்படங்களுக்காக குறைந்த அளவே சம்பளம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இனி, 2 கோடிதான்...

இனி, 2 கோடிதான்...

அனாமிகாவின் மூலம் சம்பளத்தை உயர்த்தியுள்ள நயன், இனி ஒப்பந்தமாகும் படங்களுக்கும் இதே அளவு ரூ 2கோடியைச் சம்பளமாக கேட்க முடிவெடுத்துள்ளாராம்.

பொம்மாயி வேடம் தான்...

பொம்மாயி வேடம் தான்...

அனுஷ்கா ‘ருத்ரமாதேவி' என்ற சரித்திர படத்தில் நடிப்பதற்கு அதிகச் சம்பளமான ரூ.2 கோடி பெற்றுள்ளார். இப்படத்தில் அனுஷ்காவுக்கு மகாராணி வேடமாம். இப்படத்திற்காக வாள் சண்டையும் கற்றார் அனுஷ்கா என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X