நயன்தாராவுடன் லாங் டிரைவ் போகணும்... இதுவரை உடைச்ச பர்னிச்சரெல்லாம் போதாதா?: ஆர்யா அட்ராசிட்டி!

சென்னை: ஆர்யா நடித்த காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது.

ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிதாக வசூலிக்கவில்லை.

இந்தப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ஆர்யா, நயன்தாராவுடன் லாங் டிரைவ் போக வேண்டும் எனக் கூறி அதிர்ச்சிக் கொடுத்துள்ளார்.

ஆர்யாவும் நயன்தாராவும் லிவிங் டூகெதரில் இருந்து பிரேக்அப் செய்துகொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 Nayanthara: Arya expressed his desire to go for a long drive with Nayanthara

நயனுடன் லாங் டிரைவ் போக ரெடியான ஆர்யா
ஆரம்பத்தில் உள்ளம் கேட்குமே, அறிந்தும் அறியாமலும் படங்கள் மூலம் பிரபலமான ஆர்யா, கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். கலாபக் காதலன், பட்டியல், வட்டாரம், நான் கடவுள், மதராசாப்பட்டிணம், அவன் இவன் உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ஆர்யாவுக்கு அதிகமான பெண் ரசிகைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆர்யா நடிப்பில் கடந்த வாரம் வெளியான காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. முன்னதாக இந்தப் படத்தின் ரிலீஸின் போது பிரபல சேனலில் பேட்டிக் கொடுத்திருந்தார். அதில், எந்த நடிகையுடன் லாங் டிரைவ் செல்ல வேண்டும் என ஆர்யாவிடம் கேள்விக் கேட்கப்பட்டது. அதற்கு அவர் நயன்தாராவின் போட்டோவை எடுத்து அவருடன் லாங் டிரைவ் போக வேண்டும் என்றார்.

மேலும், "இவங்களோட லாங் டிரைவ் போனா நாமதான் கார் ஓட்டணும், அவங்களுக்கு டிரைவிங்கே தெரியாது" என்றார். தொடர்ந்து பேசிய ஆர்யா பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி படங்களில் நயனுடன் நடித்தது குறித்தும் மனம் திறந்துள்ளார். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடித்த போதே, சினிமாவில் இருந்து விலக வேண்டும் என நயன் முடிவெடுத்துவிட்டார். நடிப்பு இல்லாமல் இன்னொரு லைனில் செல்ல வேண்டும் என அவருக்கு ஆசை இருந்தது.

ஆனால், ராஜா ராணி படத்தின் கதையை அட்லீ சொன்னதும், அதுபற்றி நயனிடம் பேசினேன். அந்தப் படத்தின் ரெஜினா கேரக்டர் பிடித்திருந்ததால் மீண்டும் நடிக்க ஆர்வம் காட்டினார் நயன்தாரா. இந்தப் படம் அவருக்கு கம்பேக் கொடுத்ததால் தொடர்ந்து நடிப்பில் ஆர்வம் காட்டியதாகவும் நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார். பிரபுதேவாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த நயன், பின்னர் ஆர்யாவுடன் தான் லிவிங்டூகெதரில் இருந்தார்.

 Nayanthara: Arya expressed his desire to go for a long drive with Nayanthara

இருவருமே ஒரே அப்பார்ட்மெண்டில் வசித்து வந்தனர். மேலும், ஆர்யாவும் நயனும் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும் அப்போது சொல்லப்பட்டது. ஆனால், இந்த காதலும் பிரேக்அப் ஆனதால் அதன்பின்னரே விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் நயன். இந்நிலையில் தற்போது நயனுடன் லாங் டிரைவ் செல்ல ஆசையாக இருப்பதாக ஆர்யா தெரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X