அதர்வா முரளி தம்பியை ஹீரோவாக அறிமுகப்படுத்திய நயன்தாரா.. இந்த புரமோஷனுக்கு ஏன் வந்தார் தெரியுமா?

சென்னை: தனது தயாரிப்பு படங்களை தவிர்த்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பெரும்பாலும் வேறு எந்த படங்களுக்கும் சமீபகாலமாக புரோமோஷன் செய்வதில்லை. இந்நிலையில் திடீரென்று நேற்று இரவு நடைபெற்ற நேசிப்பாயா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் நிகழ்ச்சிக்கு வந்தது ரசிகர்களை மட்டுமின்றி திரையுலகினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மறைந்த நடிகர் முரளியின் மூத்த மகன் அதர்வா பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். இந்நிலையில் அடுத்ததாக தனது தம்பியை சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் செய்ய முன்வந்துள்ளார். அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி ஹீரோவாக நடித்துள்ள நேசிப்பாயா படத்தின் நிகழ்ச்சிகள் தான் நடிகை நயன்தாரா பங்கேற்றுள்ளார்.

Nayanthara

பில்லா, ஆரம்பம் உள்ளிட்ட அஜித்தின் படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் சில வருட கேப்புக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமா படத்தை இயக்க முன்வந்துள்ளார். இந்தப் படத்தில் ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக இயக்குநர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்து வருகிறார்.

நேசிப்பாயா ஃபர்ஸ்ட் லுக் லான்ச்: பாலிவுட்டில் சேர்ஷா படத்தை இயக்கி தேசிய விருது வென்ற விஷ்ணுவர்தன் தமிழில் அஜீத் குமாரை வைத்து அடுத்ததாக படம் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஆகாஷ் முரளியை வைத்து நேசிப்பாயா எனும் படத்தை இயக்கியுள்ளார். ஆகாஷ் முரளி மற்றும் அதிதி சங்கர் நடித்துள்ள அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் நேற்று திரை பிரபலங்கள் பங்கேற்க நடைபெற்றது.

அறிமுகம் செய்த நயன்தாரா: நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வா அவருக்கு தம்பியாக நடித்துள்ளார். இந்நிலையில், அதர்வாவின் தம்பி ஆகாஷ் முதலியை தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக சூப்பர் ஸ்டார் நயன்தாரா நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அறிமுகம் செய்து வைத்தார். நடிகர் ஆர்யாவும் கலந்து கொண்டது ரசிகர்களை கூடுதல் சந்தோஷத்தில் ஆழ்த்தியது.

Nayanthara

ராஜா ராணி கூட்டணி: ராஜா ராணி, பாஸ் என்கிற பாஸ்கரன் மற்றும் ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நயன்தாரா மற்றும் ஆர்யா இணைந்து நடித்தனர். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் இருவரும் நடித்த நிலையில், நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டிருந்தால் இந்த நிகழ்ச்சி இன்னும் பெரிய அளவில் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி இருக்கும் என ரசிகர்கள் ஃபீல் செய்து வருகின்றனர். ஆர்யா அறிமுகமான அறிந்தும் அறியாமலும் மற்றும் பட்டியல் உள்ளிட்ட படங்களையும் இயக்கியவர் விஷ்ணுவர்தன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா விளக்கம்: பொதுவாக சினிமா படங்களின் பிரமோஷன்களில் பங்கேற்று வராமல் இருந்த நயன்தாரா நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், இது தொடர்பான கேள்விகள் மற்றும் விமர்சனங்கள் கிளம்பும் என்பதை அறிந்து கொண்டவர், ஆகாஷ் முரளி அறிமுகம் செய்து வைத்து பேசியபோது சினிமா புரோமோஷனல் பெரிதாக கலந்து கொள்வதில்லை. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு அழைத்தது விஷ்ணுவர்தன் சார் அவர் இயக்கத்தில் பில்லா மற்றும் ஆரம்பம் படத்தில் நடித்துள்ளேன். அதையும் தாண்டி அவர் நல்ல நண்பர், இந்த டீம் மொத்தமே நண்பர்களாக உள்ள நிலையில், நட்புக்காக வந்தேன் என விளக்கம் கொடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X