நயன்தாரா மகன்கள் கழுத்தில் சிலுவை.. அப்போ விக்னேஷ் சிவன் பசங்க கிறிஸ்டியனா? நெட்டிசன்ஸ் கேள்வி!
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா, நானும் ரௌடிதான் படத்தில் நடிந்த போது, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின் திருமணமான சில மாதத்திலேயே வாடகை தாய் மூலம் நயன்தாரா இரட்டை ஆண் குழந்தைக்கு தாய் ஆனார். இதைத்தொடர்ந்து நயன்தாரா தனது குழந்தைகளுக்கு உயிர், உலகு என தமிழ் பெயர் வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது, நயன்தாரா தனது குழந்தைகளின் கழுத்தில் சிலுவை.அணிவித்துள்ளார். அது தற்போது பேசு பொருளாகி உள்ளது.
நடிகை நயன்தாராவும், விக்னேஷ் ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த 2022 ஜூன் மாதம் 9ந் தேதி மகாபலிபுரத்தில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தில் 13க்கும் மேற்பட்ட ப்ரோகிதர்களின் வேத மந்திரங்கள் முழங்க, விக்னேஷ் சிவன் நயன்தாராவின் கழுத்தில் தாலி கட்டினார். திருமணம் முடிந்த கையோடு, நயன்தாரா தனது கணவருடன் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதன் பின் தனது சொந்த ஊரான கேரளாவிற்கு சென்று அங்கு தனக்கு பிடித்தமான கோவிலில் சாமி தரிசனம் செய்து வேண்டுதலை நிவர்த்தி செய்தார்.. இதைத் தொடர்ந்து இருவரும் அடிக்கடி கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

நயன்தாரா,விக்னேஷ் சிவன்: திருமணமான சில நாட்களிலேயே வாடகை தாயின் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயான நயன்தாரா, தனது குழந்தைக்கு இந்து முறைப்படி உயிர் மற்றும் உலகு என இந்து பெயர் வைத்து இருக்கிறார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் நயன்தாரா தனது குழந்தைகள் மற்றும் கணவருடன் இருக்கும் போட்டோக்களை பகிர்ந்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அண்மையில் நயன்தாரா பொங்கல் கொண்டாடிய போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்தார்.
பெயர் மட்டும் தான் இந்துவா: இந்நிலையில், நயன்தாராவின் குழந்தைகளில் கழுத்தில் சிலுவை அணிந்தபடி இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் தனது இரண்டு குழந்தைகளும் ஒரே நிறத்தில் உடை, ஒன்று போல கழுத்தில் சிலுவை அணிவித்து இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்து ரசிகர்கள் சிலர், அப்போது விக்னேஷ் சிவனின் குழந்தை கிறிஸ்டீனா என்றும், பெயர் மட்டும் தான் இந்துவா இதை எப்படி புரிந்து கொள்வது என தெரியவில்லை பதிவிட்டுள்ளார்.
அவர்களின் விருப்பம்: இன்னும் சிலர் நடிகை நயன்தாராவின் உண்மையான பெயர் டயானா மரியம் குரியன் என்பதும் அவர் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்பதும் அனைவரும் தெரிந்தது தானே. அப்படி இருக்கும் போது,அந்த மதத்தின் மீது இருக்கும் ஈடுபாடால் குழந்தைகளுக்கு சிலுவையை அணிவித்து இருக்கலாம். இதில் என்ன தவறு இருக்கிறது. ஒரே நேரத்தில் ஒருவர் இரண்டு மதத்தை பின் தொடர்வது தவறாகுமா என்ன? அது அவர் அவர்களின் மனநிலையை பொறுத்தது. இந்த விஷயத்தை எல்லாம் பெரிதாக்கி குழந்தைகளை சர்ச்சையில் சிக்க வைக்காதீர்கள் என்று பதிவிட்டு வருகின்றனர். அண்மைக்காலமாக நடிகை சமந்தாவும் வெளிப்படையாகவே கிறிஸ்துவத்தை பின் தொடர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











