செம பிசியாக போகுதே.. நயன்தாராவின் "மும்மொழிக் கொள்கை"...!
சென்னை: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் - 3 மொழியிலும் பிசியான நடிகையாகியிருக்கிறார்.
நயன்தாரா தமிழில் தற்போது விஜயுடன் தளபதி 63, ரஜினியுடன் தர்பார் ஆகிய படங்களிலும், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் சியே ரா நரசிம்மஹ ரெட்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே சத்தமே இல்லாமல் மலையாளப்படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளார் நயன்தாரா.

இந்த படத்தில் முதன் முறையாக நிவின் பாலியுடன் ஜோடி சேர்ந்துள்ளார் நயன்தாரா. லவ் ஆக்சன் ட்ராமா என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம், ஓணத்திற்கு திரைக்கு வரவுள்ளது.படப்பிடிப்பு நிறைவு பெற்றதன் புகைப்படத்தை நிவின் பாலி தனது சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளார்.
மலையாள முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வினீத் சீனிவாசனின் தம்பி நடிகர் தயன் சீனிவாசன், இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் நிவின்பாலி தினேசன் என்ற கதாபாத்திரத்திலும், நயன்தாரா ஷோபா என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

இப்படம் பல ஆண்டுகளுக்கு முன் வெளியான வடக்கு நோக்கி எந்திரம் மலையாளப்படத்தின் ரீமேக்-ஆக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. நகைச்சுவை நடிகர் அஜூ வர்கீஸ், இந்தப்படத்தில் நடித்திருப்பதோடு தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் உள்ளார்.
நிவின் பாலிக்கு தமிழகத்திலும் ரசிகர்கள் உள்ளதால், முதன் முறையாக நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்துள்ள இப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்த்துள்ளனர்.
விஸ்வாசம் படத்தின் வெற்றியோடு 2019-ம் ஆண்டை தொடங்கிய நயன்தாரா, ஐரா, மிஸ்டர் லோக்கல், கொலையுதிர் காலம், லவ் ஆக்சன் ட்ராமா என, இந்த ஆண்டின் படு பிசியான நடிகையாகியிருக்கிறார்


Click it and Unblock the Notifications











