»   »  நயன்தாரா பிறந்த நாளுக்காக பறந்து வந்த பாலிவுட் பிரபலம்!

நயன்தாரா பிறந்த நாளுக்காக பறந்து வந்த பாலிவுட் பிரபலம்!

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

சென்னை: நயன்தாரா நேற்று தனது பிறந்த நாளை மிகவும் சிறப்பாக கொண்டாடினார். அவரது பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் சென்னை வந்து இருக்கிறார்.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா, நயன்தாரா நடித்து வரும் படம் இமைக்கா நொடிகள். இந்த படத்தின் படப்பிடிப்பு பாதி முடிந்து இருக்கிறது.

Nayanthara celebrated her birthday with Adharva

இதில் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்தில் நயன்தாரா அதர்வாவின் அக்காவாக நடிக்கிறார்.

இந்த நிலையில் நயன்தாரா தனது பிறந்த நாளை இந்த இமைக்க நொடிகள் படக்குழுவுடன் கொண்டாடினார். அதர்வா, படத்தின் இயக்குனர் ஞானமுத்து ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

Nayanthara celebrated her birthday with Adharva

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் திடீர் என்று வந்து சர்ப்ரைஸ் கொடுத்தார். இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

English summary
Nayanthara celebrated her birthday with Adharva and Imaikka Nodikal team.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil