ஹேப்பி பர்த்டே தங்கமே.. நயன்தாரா பிறந்தநாள்.. மகன்களுடன் மாஸ் போட்டோ போட்ட விக்னேஷ் சிவன்!

சென்னை: நடிகை நயன்தாரா இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். லேடி சூப்பர்ஸ்டார் என தமிழ்நாட்டு ரசிகர்கள் மட்டுமின்றி தென்னிந்திய ரசிகர்களே கொண்டாடி வருகின்றனர்.

சமீபத்தில் பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்த நயன்தாரா இந்தியளவில் பிரபலமாகி உள்ளார்.

Nayanthara celebrates her 39th birthday with Vignesh Shivan and her twins

இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நயன்தாரா வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற நிலையில், உயிர் மற்றும் உலகம் என ட்வின்ஸ் ஆண் குழந்தைகளுக்கு அம்மாவாகி உள்ளார்.

ஹேப்பி பர்த்டே தங்கமே: நடிகை நயன்தாராவை நானும் ரவுடி தான் படத்தில் இருந்தே தங்கம் என அழைத்து வரும் விக்னேஷ் சிவன் இன்று தனது மனைவியின் பிறந்தநாளை முன்னிட்டும் ஹேப்பி பர்த்டே தங்கமே என பதிவிட்டு தனது மனைவி மற்றும் மகன்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

லேடி சூப்பர்ஸ்டார்: ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நயன்தாரா ரஜினிகாந்துக்கு ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடிக்க அவருடைய மார்க்கெட் மிகப்பெரியளவில் உயர்ந்தது. விஜய்யுடன் வில்லு, பிகில், சிவகாசி படத்தில் ஒரு பாடல், அஜித்துடன் ஆரம்பம், ஏகன், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ள நயன்தாரா உமன் சென்ட்ரிக் படங்களிலும் நடித்து லேடி சூப்பர்ஸ்டாராக மாறி உள்ளார்.

குழந்தைகளுடன் கொண்டாட்டம்: நயன்தாரா தனது 39வது பிறந்தநாளை உயிர் மற்றும் உலகத்துடன் கொண்டாடிய காட்சிகள் வெளியாகி உள்ளன. ரசிகர்கள் மற்றும் பல பிரபலங்கள் நயன்தாராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சினிமா, பிசினஸ் மற்றும் குடும்பம் என அனைத்தையும் பார்த்துக் கொள்ளும் லேடி சூப்பர்ஸ்டார் சமீப காலமாக சோஷியல் மீடியாவிலும் இணைந்து ரசிகர்களுடன் கனெக்ட்டில் உள்ளார்.

கைவசம்: அன்னபூரணி, மண்ணாங்கட்டி, தனி ஒருவன் 2 என தமிழில் நடிகை நயன்தாரா கைவசம் சில படங்கள் உள்ளன. ஜவான் படத்தின் வெற்றிக்கு பின்னர் பாலிவுட்டிலும் பட வாய்ப்புகள் அணிவகுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X