Nayanthara: ப்பா.. 2 குழந்தைகளையும் மார்பில் அணைத்துக் கொண்டு.. நயன்தாரா வீட்டில் செம விசேஷம்!
சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா தம்பதியினருக்குத் திருமணம் ஆகி ஓராண்டு காலம் ஆகி விட்ட சந்தோஷத்தை இருவரும் கொண்டாடி வருகின்றனர்.
இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவி நயன்தாராவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும், நயன்தாரா தனது உயிர் மற்றும் உலகத்தை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு மகிழ்ச்சியில் பொங்கும் போட்டோக்களையும் ஷேர் செய்துள்ளார்.

மேலும், நெகட்டிவ் கமெண்ட்ஸ் போடும் நெட்டிசன்களுக்கும் அன்பு கோரிக்கை விடுத்துள்ளார் விக்னேஷ் சிவன்.
ஒரு வருஷம் ஆகிடுச்சு: கடந்த ஜூன் 9ம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஒரு பெரிய நட்சத்திர விடுதியில் நடிகை நயன்தாராவுக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் பிரம்மாண்டமாக இந்திய திரையுலகின் பல முன்னணி நடிகர்கள் சூழ திருமணம் நடைபெற்றது.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் மணிரத்னம், சூர்யா, கார்த்தி, விஜய்சேதுபதி, அட்லீ, அனிருத் என பல பிரபலங்கள் அந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். இந்நிலையில், இன்று திருமணம் ஆகி ஓராண்டு ஆகி விட்டதை விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் செம ஹேப்பியாக கொண்டாடி வருகின்றனர்.

4 மாதத்தில் ட்வின்ஸ்: நடிகை நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் 9ம் தேதி திருமணம் ஆன நிலையில், 4 மாதங்களிலேயே இருவரும் அம்மா அப்பா ஆகிவிட்டோம் என குழந்தைகளின் போட்டோவை ஷேர் செய்து போட்ட இன்ஸ்டா போஸ்ட் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
வாடகைத் தாய் மூலமாக ட்வின்ஸ் குழந்தைகளை விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியினர் பெற்றுக் கொண்டனர் என்கிற விளக்கம் பின்னர் விளக்கப்பட்டது.
மார்போடு அணைத்து: இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை நயன்தாரா தனது உயிர் மற்றும் உலகம் என இரு ஆண் குழந்தைகளையும் மார்போடு அணைத்த படி ஹேப்பி டியர்ஸ் உடன் இருக்கும் செம க்யூட்டான போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.

ஹேட்டர்களுக்கு வேண்டுகோள்: நயன்தாராவுடன் திருமணமான இந்த ஓராண்டில் நிறைய ஏற்ற இறக்கங்கள் இருந்ததாகவும், நிறைய அடிவாங்கியதாகவும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஏகே 62 படத்தின் வாய்ப்பை இழந்ததை மறைமுகமாக பதிவிட்டுள்ளார்.
மேலும், அத்தனை கஷ்டத்திலும் வீட்டிற்கு போனால் அன்பான குடும்பமும் அழகான உயிர் மற்றும் உலகத்தையும் பார்த்தாலே தனது கவலைகள் பறந்து விடும் என்றும் ஹேட்டர்கள் நெகட்டிவ் கமெண்ட்டுகளை போடுவதை கொஞ்சம் விட்டு விட்டு நீங்கள் பாசிட்டிவிட்டியை நோக்கி நகர்ந்தால் நல்லா இருக்கும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications