நயன்தாரா மகன்களுக்கு 1 வயசு ஆகிடுச்சாம்.. ட்வின்ஸை ட்வின் டவருக்கு கூட்டிப் போய் கொண்டாட்டம்!

சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாராவின் உயிர் மற்றும் உலகத்திற்கு ஒரு வயது ஆகிய நிலையில், பிறந்தநாளை மலேசியாவில் உள்ள ட்வின் டவரில் கொண்டாடிய போட்டோக்களை லேடி சூப்பர்ஸ்டார் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு விக்னேஷ் சிவனை நயன்தாரா திருமணம் செய்துக் கொண்ட நிலையில், அதிரடியாக 4 மாதங்களில் ட்வின்ஸ் ஆண் குழந்தைகள் பிறந்ததாக அறிவித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.

Nayanthara celebrates her twin sons first birthday at Twin Towers Malaysia

வாடகைத்தாய் மூலமாக நயன்தாரா குழந்தைகளை பெற்றெடுத்ததாகவும் எந்தவொரு விதிமுறைகளையும் மீறவில்லை என கிளம்பிய சர்ச்சைக்கு விளக்கம் அளித்திருந்தனர்.

U2வுக்கு ஒரு வயசு ஆகிடுச்சு: உயிர் ருத்ரோனில் என் சிவன், உலக் தெய்வன் என் சிவன் என இரு குழந்தைகளுக்கு பெரிய பெயரை வைத்தாலும் சுருக்கமாக உயிர் மற்றும் உலகம் என்றே அழைத்து வருகின்றனர். கடந்த ஆண்டு வாடகைத் தாய் மூலமாக பிறந்த இந்த குழந்தைகளுக்கு ஒரு வயதாகி விட்ட நிலையில், மலேசியாவில் குழந்தைகளின் முதலாம் ஆண்டு பிறந்தநாளை கொண்டாடி உள்ளனர்.

ட்வின் டவரில் ட்வின்ஸ்: விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவருமே ஆளுக்கொரு குழந்தையை தோளுக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டு ட்வின் டவர் அருகே எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ட்வின்ஸ் உடன் ட்வின் டவரின் ஃபர்ஸ்ட் பர்த்டே செலிபிரேஷன் என பதிவிட்டுள்ளனர்.

Nayanthara celebrates her twin sons first birthday at Twin Towers Malaysia

என் முகம் கொண்ட: இயக்குநர் விக்னேஷ் சிவன் ஜெயிலர் படத்தில் ரத்தமாரே பாடலையே தனது குழந்தைகளை நினைத்துத் தான் எழுதி உள்ளார். இந்நிலையில், அந்த பாடலின் வரிகளான "என் முகம் கொண்ட.. என் உயிர்.. என் குணம் கொண்ட.. என் உலக்" என பதிவிட்டு முதல் முறையாக குழந்தைகளின் முகத்தை காட்டி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விட்டனர்.

காஜல் அகர்வால் கமெண்ட்: நயன்தாராவின் ட்வின்ஸ் குழந்தைகளின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நடிகை காஜல் அகர்வால், நடிகை பார்வதி உள்ளிட்ட பலர் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி கமெண்ட் போட்டுள்ளனர்.

இரண்டு குழந்தைகளும் செம க்யூட்டாக இருக்காங்க என்றும் அடிக்கடி உயிர், உலகத்தின் சேட்டைகளை இன்ஸ்டாகிராமில் பார்க்கலாம் என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X