விக்னேஷ் சிவனுடன் புத்தாண்டை செம ஸ்டைலாக கொண்டாடிய லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா.. வைரலாகும் போட்டோஸ்
சென்னை: நடிகை நயன்தாரா, காதலர் விக்னேஷ் சிவனுடன் புத்தாண்டை கொண்டாடிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
சிம்பு நடித்த போடா போடி படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன், அடுத்து நானும் ரவுடிதான் படத்தை இயக்கினார்.
இதில், விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ராதிகா, ஆர்.ஜே.பாலாஜி உட்பட பலர் நடித்திருந்தனர்.

காதல் மலர்ந்தது
இந்த படம் ஹிட்டானது. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்த இந்தப் பட ஷூட்டிங்கில் தான் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது. கடந்த சில வருடங்களாகக் காதலித்து வருகின்றனர். இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி, சமந்தா
இப்போது விக்னேஷ் சிவன், காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விஜய் சேதுபதி ஹீரோ. நயன்தாரா, சமந்தா உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங் ஐதராபாத்தில் சமீபத்தில் தொடங்கியது. அங்கு விஜய்சேதுபதி, சமந்தா நடிக்கும் காட்சிகளை ஷுட் செய்தார், விக்னேஷ் சிவன்.

படப்பிடிப்பு ரத்து
இதற்கிடையே, நடிகை நயன்தாரா, அண்ணாத்த ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக ஐதராபாத் சென்றார். அந்த ஷூட்டிங்கில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பரவியதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து தனது ஷூட்டிங்கையும் விக்னேஷ் சிவன் முடித்திருந்தார்.

ஸ்டைல் போட்டோ
இதையடுத்து நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கைகளை கோர்த்தபடி ஒன்றாக விமான நிலையத்துக்கு வந்த புகைப்படங்கள் வைரலாயின. பின்னர் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாவில் ரசிகர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். கூடவே செம ஸ்டைல் போட்டோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

நீல நிற உடை
இந்நிலையில், புத்தாண்டை காதலர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடியுள்ளார் நயன்தாரா. ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ள விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாராவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அதில் நீல நிற உடையில் செம ஸ்டைலாக இருக்கிறார் நயன்தாரா.

லைவ்வா வாங்களேன்
இந்தப் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் அவர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். சில நெட்டிசன்ஸ், இரண்டு பேரும் சேர்ந்து இன்ஸ்டாவுல லைவ்வாக வாங்களேன் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











