Nayanthara: அடடே.. நயன்தாரா குழந்தைகள் அதுக்குள்ள இப்படி வளர்ந்துட்டாங்களே.. ஓணம் வந்துடுச்சு!
சென்னை: நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் உயிர் மற்றும் உலகம் இருவரும் உட்கார்ந்து சாப்பிடும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு நயன்தாரா வீட்டில் விசேஷம் களைகட்டி உள்ளது. கடந்த ஆண்டு இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துக் கொண்ட நடிகை நயன்தாரா வாடகைத் தாய் மூலமாக இரு ஆண் குழந்தைகளுக்கு தாயானார்.

திருமணம் ஆன 4 மாதத்திலேயே நயன்தாராவுக்கு குழந்தை பிறந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினாலும், அதன் பின்னர் அதற்கான விளக்கங்கள் அளிக்கப்பட்டு இருந்தன.
நயன்தாரா வீட்டில் களைகட்டிய ஓணம்: ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த சில நாட்களாகவே நடிகைகள் பலரும் ஓணம் சேலையை அணிந்து கொண்டு இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை பதிவிட்டு ஓணம் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இந்நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது வீட்டில் நடைபெற்ற ஓணம் பண்டிகையின் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் சற்று முன் வெளியிட்டுள்ளார்.

உட்கார்ந்து சாப்பிடும் உயிரும் உலகமும்: நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் தங்கள் உயிர் மற்றும் உலகத்துடன் ஓணம் பண்டிகையை கொண்டாடும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதில், உயிர் மற்றும் உலகம் இருவரும் நன்றாக வாழை இலையை போட்டு உட்கார்ந்து சாப்பிடும் காட்சியை பார்த்து ரசிகர்கள் அதுக்குள்ள நல்லா வளர்ந்துட்டாங்களே என கண் வைத்து வருகின்றனர்.
முகத்தை காட்டவில்லை: நயன்தாராவின் குழந்தைகளின் முதுகு பகுதியை மட்டுமே காட்டி பேக் ஷாட்டில் எடுத்த போட்டோக்களை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். குழந்தைகளின் முகத்தைக் காட்டினால் கண் வைத்து விடுவார்கள் என்பதால், இப்படி பின்னாடியிருந்து எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
கேமரா முன்பாக நின்று முகத்தைக் காட்டி பிரபலங்கள் ஆனாலும், பலரும் புதிதாக பிறந்த குழந்தைகளின் முகத்தை மறைப்பதற்கு காரணமே கண் திருஷ்டி பட்டு விடும் என்கிற நம்பிக்கையில் தான்.

ஜவானில் மிரட்டல்: நயன்தாரா மற்றும் அவரது குழந்தைகள் புகைப்படங்கள் வெளியான நிலையில், ரசிகர்கள் ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அடுத்து ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி உள்ள ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி வெளியாக உள்ள நிலையில், பாலிவுட் ரசிகர்களையும் கவர உள்ளார் நயன்தாரா.


Click it and Unblock the Notifications











