Nayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்
Recommended Video

சென்னை: நயன்தாரா காதலர் தினத்தை தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடியுள்ளார்.
உலக காதலர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. கோலிவுட்டில் அதிகம் கவனிக்கப்படும், பேசப்படும் ஜோடி நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி தான்.
நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் காதலர் தினத்தை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
நயன்தாரா
காதலர் தினத்தை கொண்டாடியபோது எடுத்த புகைப்படத்தை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். நயன்தாரா பெயரில் உள்ள ட்விட்டர் கணக்கிலும் அந்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

விக்கி
காதலர் தினத்தில் நயன்தாராவுக்கு பரிசு கொடுத்து இம்பிரஸ் செய்துள்ளார் விக்னேஷ் சிவன். ஆனால் நயன்தாரா 100 படங்களில் நடித்து முடிக்கும் வரை இப்படியே காதலர் தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்க வேண்டியது தான்.
காதலர் தினம்
காதலர் தினம் நன்றாக இல்லாதவர்களுக்காக விக்கி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவன் வேற நம்மள ரொம்ப டார்ச்சர் பன்றான்டா என்று வடிவேலு வசனம் பேசியபோது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவரே தன்னை கலாய்த்துக் கொள்கிறார்.
சிங்கிள்ஸ்
நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் எப்பொழுது ஜோடியாக புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டாலும் மொரட்டு சிங்கிள்ஸ் எல்லாம் செம கடுப்பாகிறார்கள்.


Click it and Unblock the Notifications











