இப்படி ஏமாத்திட்டாரே கே.டி. குஞ்சுமோன்.. ஜென்டில்மேன் 2 படத்தில் இணைந்த அந்த நயன்தாரா யார் தெரியுமா?

சென்னை: ஜென்டில்மேன் 2 படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கப் போகிறார் என்கிற தகவல் திடீரென காட்டுத் தீ போல பரவியது. இந்நிலையில், செம ட்விஸ்ட் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார் கே.டி. குஞ்சுமோன்.

இயக்குநராக ஷங்கர் அறிமுகமானதே கே.டி. குஞ்சுமோன் தயாரிப்பில் வெளிவந்த ஜென்டில்மேன் திரைப்படத்தில் தான்.

ஆனால், இரண்டாம் பாகத்தின் அறிவித்த கே.டி. குஞ்சுமோன் இந்த படத்தை ஷங்கர் இயக்கப் போவதில்லை என்றும், இதில் அர்ஜுன் நடிக்கப் போவதில்லை என்றும் ஏ.ஆர். ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கப் போவதில்லை என்று அதிரடியாக அறிவித்தது ரசிகர்களை ஏமாற்றத்திலும் குழப்பத்திலும் ஆழ்த்தியது.

ஜென்டில்மேன் 2

ஜென்டில்மேன் 2

1993ம் ஆண்டு அர்ஜுன், மதுபாலா, கவுண்டமணி மற்றும் செந்தில் உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் வெளியான ஜென்டில்மேன் படத்தை கே.டி. குஞ்சுமோன் தயாரித்து இருந்தார். 30 ஆண்டுகளுக்கு பிறகு ஜென்டில்மேன் 2 படத்தை தயாரிக்கப் போவதாக திடீரென அறிவித்து இன்பதிர்ச்சி கொடுத்திருந்தார் கே.டி. குஞ்சுமோன்.

ஆர்ஆர்ஆர் இசையமைப்பாளர்

ஆர்ஆர்ஆர் இசையமைப்பாளர்

ஜென்டில்மேன் 2 படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கப் போவதில்லை என அறிவித்த கே.டி. குஞ்சுமோன் இசையமைப்பாளரை செம ட்விஸ்ட் உடன் அறிவித்தார். பாகுபலி, ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த பிரபல டோலிவுட் இசையமைப்பாளர் மரகதமணி தான் இந்த படத்துக்கு இசையமைக்கப் போகிறார் என்றதும் படம் வேற லெவலில் பிரம்மாண்டமாக உருவாக போகிறது என்பது கன்ஃபார்ம் ஆகி இருந்தது.

நயன்தாரா ஹீரோயினா

நயன்தாரா ஹீரோயினா

அடுத்த ஷாக்கிங் சர்ப்ரைஸாக லேடி சுப்பர்ஸ்டார் நயன்தாரா ஜென்டில்மேன் 2 படத்தில் ஹீரோயினாக நடிக்கப் போகிறார் என நேற்று கோலிவுட் முழுவதும் பரபரப்பு கிளம்பியது. நயன்தாரா ஹீரோயின் என்றால் ஹீரோ யார்? இயக்குநர் யார்? என ஏகப்பட்ட கேள்விகள் எழுந்த நிலையில், தற்போது கே.டி. குஞ்சுமோன் கொடுத்த ட்விஸ்ட் ரசிஅக்ர்களை பயங்கர ஷாக் ஆக்கி உள்ளது.

இது வேற நயன்தாரா

இது வேற நயன்தாரா

கையில் ரோஸ் கொடுத்து தோளில் கை போட்ட படி ஜென்டில்மேன் 2 படத்தின் ஹீரோயினை தற்போது அறிமுகப்படுத்தி இருக்கிறார் கே.டி. குஞ்சுமோன். நயன்தாரா சக்கரவர்த்தி எனும் குழந்தை நட்சத்திரம் வளர்ந்து இளம்பெண்ணாக மாறிய நிலையில், இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

ரசிகர்கள் அப்செட்

ரசிகர்கள் அப்செட்

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இல்லை என்பது தெரிந்ததும் அவரை வைத்து போலியான விளம்பரத்தை தேடிக் கொண்டாரா தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன் என நயன்தாரா சக்கரவர்த்தியின் அறிவிப்பை பார்ததும் பயங்கர அப்செட் ஆகி ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர். ஹீரோவாக கே.டி.குஞ்சுமோனே நடிக்கப் போகிறாரா? என்றும் கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X