ஜவான் பாட்டுக்கு நயன்தாரா கூட இப்படி ஆடல.. டைரக்டர் மனைவி போட்ட குத்தாட்டத்தை பாருங்க!

சென்னை: இயக்குனர் அட்லி இயக்கத்தில் நயன்தாரா நடித்த ராஜா ராணி திரைப்படத்தில் நடிகர் ஜெய்யை அந்த திட்டு திட்டுவாரே அவரை ஞாபகம் இருக்கிறதா? தற்போது ஜவான் பட பாட்டுக்கு நயன்தாராவை விட கலக்கல் குத்தாட்டத்தை போட்டுள்ளார்.

நடிகர் சூர்யா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தன்யா பாலகிருஷ்ணா. பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்.

Nayanthara co star and Director Balaji Mohan wife Dhanya Balakrishna grooves for Jawan song

நயன்தாரா தோழி: நீதானே என் பொன்வசந்தம், ராஜா ராணி, யார் இவன், கார்பன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்துள்ளார். காதலில் சொதப்புவது எப்படி இயக்குனர் பாலாஜி மோகனை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.

அட்லீ இயக்கத்தில் நயன்தாரா நடித்த ராஜா ராணி படத்தில் லேடி சூப்பர் ஸ்டாரின் தோழியாக நடித்த தன்யா தற்போது அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நயன்தாரா நடித்துள்ள ஜவான் படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Nayanthara co star and Director Balaji Mohan wife Dhanya Balakrishna grooves for Jawan song

ஜவான் பாட்டுக்கு குத்தாட்டம்: வெறும் வெள்ளை சட்டையை அணிந்து கொண்டு உள்ளாடை தெரியும் விதமாக படுமோசமாக நடனமாடிய வீடியோவை தன்யா பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள நிலையில் அதைப் பார்த்து ரசிகர்கள் ஆடிப் போய் உள்ளனர்.

ஜெயிலர் படத்தின் காவலா மற்றும் லியோ படத்தின் நான் ரெடி பாடலுக்கு தான் ரீல்ஸ் போடுவார்களா எனது தோழியின் ஜான் பட பாடலுக்கும் நான் ரீல்ஸ் போடுறேன் பாருங்க என தன்யா பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அந்த வீடியோவுக்கு லைக்குகள் மற்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

Nayanthara co star and Director Balaji Mohan wife Dhanya Balakrishna grooves for Jawan song

பாலாஜி மோகன் மனைவி: காதலில் சொதப்புவது எப்படி, மாரி, மாரி 2 உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குனர் பாலாஜி மோகனின் மனைவியா இப்படி குத்தாட்டம் போடுகிறார் என ரசிகர்கள் இப்ப வந்து அந்த ரிலீஸ் வீடியோவை பார்த்து அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

நயன்தாரா கூட அந்த பாட்டுக்கு இப்படி ஆடவில்லையே வெறித்தனமா ஆடியிருக்கீங்க என தன்யா பாலகிருஷ்ணா ரசிகர்களும் அவரது டான்ஸ் வீடியோவை பார்த்து பாராட்டி கமெண்ட்களை போட்டு தாக்கி வருகின்றனர். மேலும், மோசமாக ஆடை அணிந்து தன்யா ஆட்டம் போடுவதாகவும் அக்கா இப்படி டிரெஸ் பண்ணிட்டு நடனம் போட வேண்டாம் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X