“முருகதாஸ் என்னை ஏமாற்றி விட்டார்”.. கடும் கோபத்தில் நயன்தாரா தந்த பேட்டி.. அதிர்ச்சியில் கோலிவுட்!
கஜினி படத்தில் தான் ஏமாற்றப்பட்டு விட்டதாக நயன்தாரா தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: தனது சினிமா வாழ்க்கையில் தான் மறக்க விரும்பும் படம் கஜினி தான் என நயன்தாரா தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டாராக அறியப்படுபவர் நயன்தாரா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் மிக அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகையாக நயன் தான் உள்ளார்.
ரஜினி, விஜய், அஜித் என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்தாலும், நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்து வருகிறார். எனவே அவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.

அறிமுகம்
ஐயா படம் மூலம் தமிழில் அறிமுகமான நயன், கடந்த சில வருடங்களாக ஊடகங்களுக்கு பேட்டியளிப்பதையே தவிர்த்து வருகிறார். அதோடு தான் நடிக்கும் பட புரொமோசன்களிலும் அவர் பங்கேற்பதில்லை.

கஜினி
இந்நிலையில், ரேடியோ ஒன்றிற்கு தற்போது அவர் பேட்டியளித்துள்ளார். அதில், தன் சினிமா கேரியரில் தான் செய்த மிகப்பெரிய தவறு பற்றி அவர் வெளிப்படையாகப் பேசியுள்ளார். அதாவது, ‘முருகதாஸின் கஜினி படத்தில் நடித்தது தான் தனது 15 வருட சினிமா வாழ்க்கையில் தான் செய்த மிகப்பெரிய தவறு' என அவர் குறிப்பிட்டுள்ளார்.

டம்மி
மேலும், அப்படத்தின் இயக்குநரான முருகதாஸ் முதலில் தன்னிடம் கதையைச் சொன்னபோது சித்ரா என்கிற அந்த கேரக்டர், இன்னொரு கதாநாயகியான அசினுக்கு இணையானது எனக் கூறியதாகவும், ஆனால் படத்தில் தனது கேரக்டர் டம்மியாக்கப் பட்டு விட்டதாகவும் நயன் ஆதங்கப் பட்டுள்ளார்.

மறக்க விரும்பும் படம்
திரையில் தனது காட்சிகளைப் பார்த்த போது தான் ஏமாற்றப்பட்டது புரிந்தது என்றும், அதற்குப்பிறகு தான் கதைகளை மிக கவனமாக கேட்க ஆரம்பித்துவிட்டதாகக் கூறியுள்ள நயன், தான் ஏமாந்த, மறக்க விரும்பும் ஒரே படம் கஜினி தான் எனக் கூறியுள்ளார்.

அதிர்ச்சி
சூர்யா நடிப்பில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த கஜினி படம் கடந்த 2008ம் ஆண்டு வெளியானது. சுமார் 11 வருடங்களுக்குப் பிறகு நயன் அப்படம் பற்றி இப்படி பேட்டி அளித்துள்ளது திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ரஜினி ஜோடி
அதோடு நயன் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் ரஜினியின் ஜோடியாக தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ளார். அப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. இந்த சூழ்நிலையில் தான் முருகதாஸை நேரடியாகத் தாக்கி நயன் இப்படி பேட்டி அளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பளப் பிரச்சினை
சம்பளப் பிரச்சினை காரணமாக தர்பார் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பிற்கு நயன் மறுத்து விட்டதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது. அந்தப் பிரச்சினையில் முருகதாஸ் தலையிட்டு தீர்த்து வைத்ததாகவும் கூறப்பட்டது இங்கே நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











