நண்பன் தனுஷுக்காக சம்பளமின்றி குத்தாட்டம் போட்ட நயன்தாரா
சென்னை: நயன்தாரா தனுஷ் தயாரிக்கும் எதிர்நீச்சல் படத்தில் சம்பளம் வாங்காமல் குத்தாட்டம் போட்டுள்ளார்.
தனுஷ் சிவகார்த்திகேயன், ப்ரியா ஆனந்த் நடிக்கும் எதிர்நீச்சல் படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட வேண்டும் என்று தனுஷ் நயன்தாராவை கேட்டுள்ளார். நயனும் உடனே ஓ.கே. சொல்லிவிட்டார்.
அதற்கு காரணம் தனுஷ் தன் நண்பர் என்பது தான்.

யாரடி நீ மோகினி
யாரடி நீ மோகினி படத்தில் நடித்த போது தனுஷும், நயன்தாராவும் நல்ல நண்பர்களாகிவிட்டனர்.

நட்புக்கு மரியாதை
நட்புக்கு மரியாதை கொடுத்து தான் நயன் எதிர்நீச்சல் படத்தில் தனுஷுடன் சேர்ந்து ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

சம்பளமே வாங்கவில்லை
நண்பன் தயாரிக்கும் படம் என்பதால் நயன் சம்பளமே வாங்காமல் குத்துப் பாட்டுக்கு ஆடியுள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications