Nayanthara - அதற்காக இறங்கிவந்த நயன்தாரா?.. ஆளு பலே கில்லாடிதான் போல.. எடுத்திருக்கும் முடிவை பாருங்க

சென்னை: Nayanthara (நயன்தாரா) நயன்தாரா புதிய முடிவை எடுத்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.

நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது அந்தப் படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலிக்க தொடங்கினார் நயன். பல வருடங்கள் இரண்டு பேரும் திருமணம் செய்துகொள்ளாமல் லிவிங் டூ கெதரில் இருந்தார்கள். பிறகு ஒருவழியாக கடந்த வருடம் மகாபலிபுரத்தில் இரண்டு பேரும் பிரமாண்டமாக திருமணம் செய்த்கொண்டனர். ரஜினி, ஷாருக்கான் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் அதில் கலந்துகொண்டனர்.

Nayanthara Decided to will Attend the Jawan Promotion

உயிர், உலக்: அதனையடுத்து நயன் தாராவும், விக்னேஷ் சிவனும் வாடகை தாய் மூலம் குழந்தைகள் பெற்றுக்கொண்டனர். இரண்டு ஆண் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு உயிர் ருத்ரோனில் N சிவன் என்றும், மற்றொரு குழந்தைக்கு உலக் தெய்வீக் N சிவன் என்றும் பெயர் வைத்திருக்கிறார்கள். இதற்கிடையே அவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டது சர்ச்சையான சூழலில் விசாரணை நடந்தது. அதில் எந்த விதிமீறலும் இல்லை என்பது தெரியவந்தது.

பிஸி தாய்: இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார் நயன். பொறுப்பான தாயாக குழந்தைகளை கவனித்துக்கொள்கிறார். சமீபத்தில்கூட தனது மகன்களை அவர் கொஞ்சிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டானது. சூழல் இப்படி இருக்க அட்லீ இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜவான் படத்தில் திருமணத்திற்கு முன்பே கமிட்டாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜவானில் நயன்: ஜவான் படம் செப்டம்பர் ஏழாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. பாலிவுட்டில் முதன்முறையாக எண்ட்ரி கொடுத்திருப்பதால் இந்தப் படம் ஹிட்டடித்தால் மும்பையிலும் ஒரு ரவுண்டு வரலாம் என்ற திட்டத்தில் நயன் இருப்பதாக பேசப்படுகிறது. அதுமட்டுமின்றி ஜவான் படத்தில் நடித்ததால் தனது சம்பளத்தையும் இனி வரும் படங்களில் அதிகரிக்க அவர் திட்டமிட்டிருப்பதாகவும் ஒரு தகவல் உலாவுகிறது.

Nayanthara Decided to will Attend the Jawan Promotion

நயன் எடுத்த முடிவு?; இந்நிலையில் ஜவான் படத்துக்காக நயன் தாரா தனது தீர்க்கமான முடிவை மாற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதாவது நயன்தாரா ஒரு படத்தில் கமிட்டாகும்போது அந்தப் படம் தொடர்பான விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளமாட்டேன் என்று கண்டிஷன் போட்டுத்தான் கமிட்டாவார். அதன்படிதான் கடந்த பல வருடங்களாகவே இருக்கவும் செய்கிறார். ஆனால் தற்போது தனது தீர்க்கமான முடிவை மாற்றிக்கொண்ட அவர் ஜவான் படத்தின் ப்ரோமோஷனில் கலந்துகொள்ள முடிவெடுத்திருக்கிறாராம். அதற்கு முழுக்க முழுக்க ஷாருக்கான் மட்டும்தான் காரணம் என்று கூறப்படுகிறது.

அதேசமயம் ஷாருக்கான் மட்டும் காரணம் இல்லை. ஒருவேளை ஜவான் ஹிட்டடித்தால் பாலிவுட்டில் பெரிய ரவுண்டு வர காத்திருக்கிறார் நயன். எனவே முதல் படத்திலேயே ப்ரோமோஷனில் கலந்துகொள்ளமாட்டேன் என கறார் காட்டினால் அடுத்தடுத்த வாய்ப்புகள் வருவது கடினம் ஆகிவிடும். எனவே இதையெல்லாம் கணக்கு போட்டதால்தான் அவர் ப்ரோமோஷனில் கலந்துகொள்ள திட்டமிட்டிருக்கிறார் என்றும் ஒருதரப்பினர் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X