இந்திப் பட ரீமேக்கில் நடிக்க, இவ்ளோ கோடி கேட்ட பிரபல நடிகை நயன்தாரா.. தயாரிப்பாளர் அதிர்ச்சி!

By

சென்னை: இந்திப்பட ரீமேக்கில் நடிக்க, நயன்தாரா கேட்ட சம்பளம் தெலுங்கு தயாரிப்பாளரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

Recommended Video

Nayanthara & Ramya Krishanan lose Crores of rupees

இந்தியில், அயுஷ்மன் குர்ரானா, தபு, ராதிகா ஆப்தே உட்பட பலர் நடித்து ஹிட்டான படம், அந்தாதுன்.

பிளாக் காமெடி கிரைம் த்ரில்லர் படமான இதை, ஸ்ரீராம் ராகவன் இயக்கியிருந்தார்.

தேசிய விருதுகள்

தேசிய விருதுகள்

சிறந்த இந்தி படம், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை என 3 தேசிய விருதுகளைப் பெற்ற இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமைக்குப் போட்டி நிலவியது. தமிழ் ரீமேக்கில் சித்தார்த் நடிக்கிறார் என்றும் தனுஷ் நடிக்கிறார் என்றும் கூறப்பட்டது. பின்னர் இதன் ரீமேக் உரிமையை தியாகராஜன் வாங்கினார். இதில் பிரஷாந்த் ஹீரோவாக நடிப்பார் என்று அறிவித்திருந்தார்.

மோகன் ராஜா

மோகன் ராஜா

இதுகுறித்து அவர், ஸ்ரீராம் ராகவனின் 'ஜானி கட்டார்' படத்தை பிரசாந்த் நடிப்பில் ஜானி என்ற பெயரில் ஏற்கனவே ரீமேக் செய்திருந்ததாகவும் அந்தாதுன் கதை பியானோ மாஸ்டரை பற்றியது, பிரஷாந்த், பியானோ பயின்றிருக்கிறார் என்பதால் அந்த கேரக்டருக்கு சரியாக பொருந்துவார் என்றும் அவர் ஏற்கனவே கூறியிருந்தார். இந்தப் படத்தை மோகன் ராஜா இயக்குகிறார்.

தெலுங்கு ரீமேக்

தெலுங்கு ரீமேக்

இந்தப் படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. இதில் நிதின் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் தபுவின் கேரக்டர் முக்கியமானது. அதனால் அந்த கேரக்டரில் முன்னணி நடிகை ஒருவரை நடிக்க வைக்க படக்குழு பேசி வருகிறது. இதற்கிடையே, நடிகை நயன்தாராவிடம் பேசியுள்ளனர். அவர் இதற்கு சம்பளமாக ரூ.4 கோடி கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

யோசித்து வருவதாக

யோசித்து வருவதாக

இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள படக் குழுவினர் யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. தெலுங்கில் இந்தப் படத்தை நிதின் தயாரித்து நடிக்க உள்ளார். நடிகை நயன்தாரா, தமிழ் படங்களில் நடிக்க ரூ. 4 கோடி வரை கேட்பதாகக் கூறப்படுகிறது. ரஜினியின் தர்பார் படத்தில் அவர் சம்பளம் ரூ.4.5 கோடி என்றும் அதே சம்பளத்தைதான் அவர் கேட்டிருக்கிறார் என்றும் சினிமா வட்டாரத்தில் கூறுகின்றனர்.

தயாரிப்பாளரின் மகன்

தயாரிப்பாளரின் மகன்

நடிகர் நிதின், தனது காதலி ஷாலினியை கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார். ஜெயம் படம் மூலம் ஹீரோவான இவர், அங்கு முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். லாக்டவுனுக்கு முன்பாக அவர் நடித்த பீஷ்மா படம் சூப்பர் ஹிட்டாக ஓடியது. இதையடுத்து அந்தாதுன் ரீமேக்கில் அவர் நடிக்க இருக்கிறார். இவர் தெலுங்கு தயாரிப்பாளர் சுதாகர் ரெட்டியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X