தனுஷ்- நயன்தாரா வழக்கின் இறுதி விசாரணை.. தீர்ப்பு யாருக்கு சாதகமாக வரும்!

சென்னை: நயன்தாரா தனது ஆவணப்படத்தில் நானும் ரௌடி படத்தின் காட்சிகளை அனுமதியில்லாமல் பயன்படுத்தியதாக கூறி நயன்தாராவிற்கு எதிராக நடிகர் தனுஷ் ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று நடைபெற உள்ளது.

நடிகை நயன்தாரா தனது திருமண ஆவண படத்தில் நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தயாரித்த நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. அனுமதியின்றி படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என நடிகை நயன்தாராவுக்கு நடிகர் தனுஷ் தரப்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.

nayanthara dhanush kollywood

நயன்தாராஅறிக்கை: இந்த நோட்டீசுக்கு பதிலளித்து நடிகை நயன்தாரா அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், தனுஷின் இந்த செயல் தனக்கும், தனது கணவருக்கும் மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்துவதாகவும், இந்த செயலால் தனுஷ் எப்படிப்பட்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்துவிட்டது. நானும் ரௌடிதான் படத்தின் வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது என்றும், மேலும் நானும் ரௌடிதான் படத்தின் பாடலை பயன்படுத்த தனுஷ் அனுமதி அளிக்காததால், படப்பிடிப்பின் போது செல்போனில் எடுத்த காட்சிகளைத் தான் அந்த ஆவணப்படத்தில் பயன்படுத்தி இருந்தோம் என கூறியிருந்தார். மேலும், தனுஷின் நோட்டிஸை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என்று அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.

10 கோடி இழப்பீடு: இதையடுத்து, நடிகை நயன்தாராவுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கேட்டு நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கை தாக்கல் செய்ய வொண்டர் பார் நிறுவனத்துக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டதை தொடர்ந்து, நானு ரௌடிதான் பட காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும், காட்சிகளை பயன்படுத்த தடை கோரியும் வொண்டர்பார் நிறுவனம் தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இன்று இறுதி விசாரணை: இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், வழக்கு தொடர்பாக பதிலளிக்கும்படி, நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். மேலும், பதில் மனுக்களுக்கு, தனுஷ் தரப்பிலும் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஜனவரி 8ம் தேதிக்கு ஒத்திக்கு வைத்தார். இதையடுத்து இன்று இந்த வழக்கின் இறுதி விசாரணை நடைபெற உள்ளது. இதில் தீர்ப்பு யாருக்கு சாதகமாக வரும் என்பது தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X