ஷாருக்கானும் விரும்பவில்லை; நயன்தாராவும் பிகினியில் நடிக்கவில்லை.. வெளியானது உண்மை தகவல்

மும்பை: ஷாருக்கானுடன் நடிக்கும் ஜவான் படத்தில் நயன்தாரா பிகினியில் நடிக்கிறார் என தகவல் வெளியான சூழலில் அது பொய்யான செய்தி என தற்போது தெரியவந்திருக்கிறது.

ஐயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நயன்தாரா. ஹரி இயக்கத்தில் உருவாகியிருந்த அந்தப் படமானது மெகா ஹிட்டானது. மேலும் அந்தப் படத்தில் அவரது நடிப்பை பார்த்தவர்கள் நயன்தாரா தமிழ் சினிமாவில் பெரும் ரவுண்டு வருவார் என கணித்தனர்.

சூப்பர் ஸ்டாருடன் ஜோடி

சூப்பர் ஸ்டாருடன் ஜோடி

அவர்களது கணிப்பு சரியாகும் விதமாக ஐயா படத்துக்கு பிறகு சில படங்களில் நடித்த நயன்தாராவுக்கு ஜாக்பாட் அடித்தது. அதன்படி அவர் சந்திரமுகி படத்தில் ரஜினிக்கும் ஹீரோயினானார். துளசி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர் அந்தப் படத்திலும் ஒழுங்காக பேச முடியாத கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பையே வெளிப்படுத்தினார். அதன் பிறகு கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்தார் நயன்தாரா.

டாப் ஹீரோயின் நயன்

டாப் ஹீரோயின் நயன்

சந்திரமுகி படத்துக்கு பிறகு விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தார் நயன். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் தனது வெற்றிக்கொடியை பறக்கவிட்டு முன்னணி நடிகையாக வலம் வந்தார். எனவே அடுத்த சில வருடங்களுக்கு நயனின் ஆட்சிதான் கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் நடைபெற போகிறது என பலர் ஆரூடம் கூறினர். அவர்களின் ஆரூடம் பலிக்கும்படிதான் நயனின் க்ராஃப்பும் உச்சம் சென்றது.

இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் திருமணம்

இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் திருமணம்

நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவனை காதலிக்க ஆரம்பித்தார். இருவரும் தீவிரமாக பல வருடங்கள் காதலித்தனர். ஒருவழியாக கடந்த வருடம் ஜூன் மாதம் இருவரும் மகாபலிபுரத்தில் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகும் நயன்தாரா தொடர்ந்து நடித்து வருகிறார்.

ஜவான் படத்தில் நயன்

ஜவான் படத்தில் நயன்

நயன் தற்போது கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட்டிலும் நடிக்கிறார். அதன்படி அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் அவர் கமிட்டாகியிருக்கிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மேலும், நயன்தாராவின் போர்ஷன் விரைவில் முடியப்போவதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் பில்லா படத்துக்கு பிறகு ஜவான் படத்தில் நயன்தாரா பிகினி உடையில் நடிக்கிறார் என சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. அதெசமயம் இந்தத் தகவல் பொய் எனவும், பதான் படத்தில் தீபிகா படுகோனே ஷாருக்கானுடன் அப்படி நடித்ததால் அதே போல் ஜவானிலும் இருக்கும் என யாரோ கிளப்பிவிட்டிருக்கிறார்கள் எனவும் கூறப்படுகிறது.

பிகினியெல்லாம் இல்லை

பிகினியெல்லாம் இல்லை


இந்நிலையில் ஜவான் படத்தில் நயன்தாரா பிகினியில் நடிப்பார் என கூறப்பட்டது பொய்யான தகவல் என தெரியவந்திருக்கிறது. மேலும், "ஜவான் படத்தில் நயன்தாராவை பிகினி உடையில் நடிக்க வைக்கும் திட்டம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிகினி அணிவதில் அவருக்கு எந்த பிரச்னையும் இல்லை. அவர் தமிழிலேயே அப்படி நடித்திருக்கிறார். ஆனால் பதான் படத்தில் தீபிகா நடித்ததால் ஜவானிலும் நயன் நடிப்பார் என்பது யாரோ கிளப்பிவிட்ட செய்தி. அதுமட்டுமின்றி ஷாருக்கானும் நடிகைகளுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்க விரும்புவதில்லை" என படக்குழு தெரிவித்துள்ளதாக இப்போது புதிய தகவல் ஒன்று வட்டமடிக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X