ஷாருக்கானுக்கு ஒரு நியாயம்.. ஜெயம் ரவிக்கு ஒரு நியாயமா.. நயன்தாராவின் செயலால் ரசிகர்கள் அப்செட்!

சென்னை: இயக்குநர் அகமத் இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, ராகுல் போஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள இறைவன் படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.

பல ஆண்டுகளாக உருவாகி வரும் இந்த படத்தின் மீது இதுவரை ரசிகர்கள் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாத நிலையில், இன்று வெளியான ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை டபுள் மடங்காக மாற்றியுள்ளது.

Nayanthara didnt promote Iraivan trailer in her instagram page gets trolled

ஆனால், சமீபத்தில் ஜவான் படத்திற்கு இன்ஸ்டாகிராமில் புரமோஷன் செய்த லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ஜெயம் ரவியின் இறைவன் படத்தின் ட்ரெய்லரை மட்டும் ஏன் புரமோட் செய்யவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

புரமோஷனுக்கே போக மாட்டேன்: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்த வயதிலும் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஒரு மணி நேரம் கால் கடுக்க நின்று படத்தை பற்றியும் படத்தில் பணியாற்றியவர்கள் பற்றியும் பட வசூலை தூண்ட காக்கா - கழுகு கதையெல்லாம் சொல்லி பாக்ஸ் ஆபிஸ் வேட்டை நடத்திய நிலையில், லேடி சூப்பர்ஸ்டார் என கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் உருவாகும் படங்களின் புரமோஷனுக்கு மட்டும் வருகிறார் என்றும் மற்ற திரைப்படங்களின் புரமோஷனுக்கு செல்வதில்லை என்கிற குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

பாலிவுட்டில் ஜவான் படத்தின் மூலம் அறிமுகமாக உள்ள நிலையில், மும்பையில் இருந்து சென்னைக்கு ஷாருக்கான் வந்து தனது படத்தின் புரமோஷனுக்காக மேடையில் அனிருத்துடன் ஆட்டம் போட்டு ரசிகர்களை மகிழ்விக்கும் நிலையில், நடிகை நயன்தாரா பெயருக்கு கூட அதில் கலந்து கொள்ளவில்லையே என்கிற விமர்சனங்கள் கிளம்பின.

Nayanthara didnt promote Iraivan trailer in her instagram page gets trolled

இன்ஸ்டாகிராமில் புரமோஷன்: மேலும், துபாய் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெறும் ஜவான் புரமோஷனிலும் பங்கேற்க முடியாத சூழலில் திடீரென இன்ஸ்டாகிராமில் கணக்கை ஆரம்பித்த நயன்தாரா அந்த படத்தின் டிரெய்லரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு புரமோட் செய்திருந்தார்.

இந்நிலையில், இனி வரும் அனைத்து படங்களுக்கும் நயன்தாரா இதே போல இன்ஸ்டாகிராமில் புரமோஷன் செய்வார் என கோலிவுட் பிரபலங்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், இன்று வெளியான ஜெயம் ரவியின் இறைவன் டிரெய்லரை நயன்தாரா புரமோட் செய்யவில்லை என்பதை அறிந்த ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர்.

Nayanthara didnt promote Iraivan trailer in her instagram page gets trolled

ஜெயம் ரவிக்கு இல்லை: ஜவானுக்கு புரமோஷன் செய்த நயன்தாரா ஜெயம் ரவி நடிப்பில் வெளியான இறைவன் படத்துக்கு ஒரு போஸ்ட் போட்டால் என்ன குறைந்தா போய் விடுவார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும், இறைவன் டிரெய்லரில் நயன்தாரா போர்ஷன் தான் படு மொக்கையாக உள்ளதாகவும் ட்ரோல் செய்து வருகின்றனர். ஆனால், நயன்தாரா ரசிகர்கள் சீக்கிரமாகவே நயன்தாரா இறைவன் ட்ரெய்லரை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிடுவார் என வெயிட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X