“லவ்லி நயன்தாராவும்... ஒரு லட்டுக்குட்டி பாப்பாவும்”... இந்த வீடியோவை மிஸ் பண்ணிடாதீங்க!

நயன் குழந்தையைக் கொஞ்சும் வீடியோ வைரலாகியுள்ளது.

Recommended Video

SK 13 ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து லீக் ஆன 'குட்டி நயன்' புகைப்படங்கள்.

சென்னை: நடிகை நயன்தாரா ஒரு குட்டி பாப்பாவுடன் கொஞ்சி மகிழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நார்வே நாட்டில் நடைபெற்று வருகிறது. படத்தின் நாயகியான நயன்தாரா இப்படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார்.

இந்த படப்பிடிப்பில் சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா எடுத்துக்கொண்ட போட்டோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டது. படத்தின் புரோமோஷனுக்கு உதவும் வகையில் அது அமைந்தது.

இந்நிலையில் நயன்தாரா ஒரு குட்டி பாப்பாவுடன் கொஞ்சி மகிழும் வீடியோ வெளியாகியுள்ளது. நயன்தாராவே தனது டிவிட்டர் பக்கத்தில் இதனை வெளியிட்டுள்ளார்.

பாப்பாவுடன் நயன்:

அதில், பார்த்தாலே கொஞ்சத் தோன்றும் லட்டு போன்ற குட்டிப்பாப்பா ஒன்றுடன் நயன் இருக்கிறார். முதலில் இருவரும் போட்டோவுக்கு போஸ் கொடுக்கின்றனர். பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் கொஞ்சி விளையாடுகின்றனர்.

குழந்தையான நயன்:

இன்று காலை பதிவிடப்பட்ட இந்த வீடியோவை இதுவரை ஐம்பதாயிரத்திற்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர். இந்த வீடியோவில் நயனும் ஒரு குழந்தையாகவே மாறி விட்டதாக ரசிகர்கள் கமெண்ட் தெரிவித்துள்ளனர்.

இது புதிதல்ல:

இதற்கு முன்னரும் படப்பிடிப்பின் போது நயன் குழந்தை ஒருவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இந்த ரசிகர் பகிர்ந்துள்ளார்.

அந்தக் குழந்தையே நயன் தான்:

இந்த ரசிகரோ எல்லோருக்கும் ஒரு படி மேலே போய் ‘இந்த வீடியோவில் எனக்கு நயன் தான் குழந்தை மாதிரி தெரிகிறார்' எனத் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X