ரூட்டை மாற்றும் நயன்தாரா: எல்லாம் திருமணத்திற்காகவா?
Recommended Video

சென்னை: அடுத்தடுத்து மலையாள படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார் நயன்தாரா.
கோலிவுட்டின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா தனது காதலரான விக்னேஷ் சிவனை இந்த ஆண்டே திருமணம் செய்யக்கூடும் என்று கூறப்படுகிறது.
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடிக்கும் ஐடியாவில் உள்ளாராம் நயன்தாரா.

இளமை
ஒல்லிக்குச்சியாக இருக்கும் நயன்தாரா வயதானவர் போன்று தெரிகிறார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில் திருமணம் முடிந்தால் அக்கா, ஆன்ட்டியாக்கிவிடுவார்கள் என்று பயப்படுகிறாராம்.

ஹீரோயின்
மலையாள திரையுலகில் திருமணமாகி குழந்தைகளுக்கு தாயான பிறகும் தொடர்ந்து ஹீரோயினாக நடிக்க முடியும். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு நடிகை மஞ்சு வாரியர் தான்.

மலையாளம்
தன் சொந்த மாநிலமான கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா. மலையாள திரையுலகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கியுள்ளார். அடுத்தடுத்து மலையாள படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். இந்த ஆண்டே திருமணம் என்பதால் இந்த முடிவு எடுத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

சாட்டிலைட் உரிமம்
தியான் சீனிவாசன் இயக்கத்தில் நிவின் பாலி, நயன்தாரா நடிக்க உள்ள படத்தின் சாட்டிலைட் உரிமம் பெரிய விலைக்கு சென்றுள்ளதாம். படப்பிடிப்பு துவங்கும் முன்பே சாட்டிலைட் உரிமம் பெரிய விலைக்கு சென்றுள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











