உங்களை யாரும் அப்படி எல்லாம் நினைக்கல: கார்த்தி ஹீரோயினுக்கு நயன் ஃபேன்ஸ் நோஸ்கட்
சென்னை: தன்னை நயன்தாராவுடன் ஒப்பிட வேண்டாம் என்று நடிகை ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார். இதை கேட்டு நயன்தாரா ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர்.
கார்த்தியுடன் சேர்ந்து ரகுல் ப்ரீத் சிங் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. நீண்ட நாட்கள் கழித்து கார்த்திக்கு ஒரு ஹிட் கிடைத்துள்ளது.
ரகுல் ப்ரீத் சிங் நடித்து நல்ல வரவேற்பை பெற்றுள்ள முதல் தமிழ் படம் இது.

கோலிவுட்
2012ம் ஆண்டு கோலிவுட்டில் அறிமுகமானார் ரகுல் ப்ரீத் சிங். ஆனால் அவர் நடித்த தமிழ் படங்கள் எதுவும் ஓடவில்லை. இந்நிலையில் தான் தீரன் அதிகாரம் ஒன்றுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஹிட்
தெலுங்கு திரையுலகில் கொடி கெட்டிப் பறக்கிறார் ரகுல். ஆனால் தமிழ் திரையுலகில் மட்டும் அவருக்கு படங்கள் ஹிட்டாகாமல் இருந்து வந்தன. அவர் மிகவும் எதிர்பார்த்த ஸ்பைடர் படம் கூட கை கொடுக்கவில்லை.

நம்பிக்கை
தீரன் அதிகாரம் ஒன்று மூலம் ராசியில்லாத நடிகை என்ற பெயர் மாறியுள்ளது. இனி டோலிவுட்டை போன்று கோலிவுட்டிலும் முன்னணி நடிகையாகிவிட வேண்டும் என்று விரும்புகிறார் ரகுல்.

ஒப்பீடு
என்னை நயன்தாராவுடன் தயவு செய்து ஒப்பிட வேண்டாம். அவர் ரொம்ப சீனியர் நடிகை. நான் அவரை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு புதிய உயரம் தொட விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.

அப்படியா?
உங்களை யாரும் எங்கள் தலைவி நயன்தாராவுடன் ஒப்பிடவில்லை. அதனால் இப்படி எல்லாம் நீங்களாக கிளப்பி விட வேண்டாம் என்று நயன்தாரா
வெறியர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











