நயன்தாராவை பற்றி அப்படி பேசிய கரண் ஜோஹர்.. திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்.. ஜவான் வரட்டும்!
சென்னை: கரண் ஜோஹர் நிகழ்ச்சியில் நடிகை சமந்தா கலந்து கொண்ட நிலையில், நயன்தாராவை மட்டம் தட்டிப் பேசி விட்டார் என நயன்தாரா ரசிகர்கள் கரண் ஜோஹரை விளாசி வருகின்றனர்.
காபி வித் கரண் நிகழ்ச்சியில் இனி தான் இல்லை என அறிவித்து கவனத்தை ஈர்த்து விட்டு மீண்டும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர்.
சமீபத்தில், சமந்தா மற்றும் அக்ஷய் குமார் இருவரும் கரண் ஜோஹர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது அதிகளவிலான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சமந்தாவை தூக்கிய அக்ஷய்
கரண் ஜோஹரின் காபி வித் கரண் நிகழ்ச்சியில் நடிகை சமந்தா மற்றும் அக்ஷய் குமார் கலந்து கொண்டனர். செட்டுக்குள் வரும் போதே சமந்தாவை அலேக்காக தூக்கிக் கொண்டு அக்ஷய் குமார் வந்ததே ட்ரோல் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி அக்ஷய் குமார் நிகழ்ச்சியிலும் சமந்தாவை கண்டபடி தூக்கி சுற்றியது நாக சைதன்யா ரசிகர்களை ரொம்பவே கடுப்பில் ஆழ்த்தியது.

ஓ சொல்றியா மாமா
அக்ஷய் குமாருடன் சமந்தா புஷ்பா படத்தின் ஓ சொல்றியா மாமா பாட்டுக்கும் படு கவர்ச்சியாக நடனமாடி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார். இந்நிலையில், சமீபத்தில் ஓடிடியில் வெளியான காபி வித் கரண் நிகழ்ச்சியில் நாக சைதன்யா பற்றி சமந்தா பேசியது, அன் ஹேப்பி திருமணங்களுக்கு நீங்க தான் காரணம் என கரண் ஜோஹர் மீது பழி போட்டது என ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பின.

நயன்தாராவை பாராட்டிய சமந்தா
அந்த நிகழ்ச்சியில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாராவுடன் நடித்த அனுபவத்தை சமந்தா ஷேர் செய்திருந்தார். நயன்தாராவின் ஸ்டார்டம் மற்றும் அவரது எளிமை குறித்து பாராட்டி பேசியிருந்தார். உடனடியாக குறுக்கிட்டு கரண் ஜோஹர் பேசியது தான் தற்போது ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தி உள்ளது. கரண் ஜோஹரை திட்டி ஏகப்பட்ட நயன்தாரா ரசிகர்கள் ட்வீட் போட்டுள்ளனர்.

நம்பர் ஒன் சமந்தா
ஆர்மேக்ஸ் நடிகைகள் பட்டியலில் நடிகை சமந்தா முதலிடத்தை பிடித்துள்ளார் அந்த பட்டியலில் நடிகை நயன்தாரா 3வது இடத்தை பிடித்துள்ளார் என்பதை வைத்து சர்ச்சையான கருத்தை கரண் ஜோஹர் பேசியதாக அவருக்கு எதிராக நயன்தாரா ரசிகர்கள் விட்டு விளாசி வருகின்றனர். நெப்போ கிட்ஸ்க்கு மட்டும் தான் கரண் ஜோஹர் சப்போர்ட் செய்வார், நயன்தாரா மீடியா பேக்கிரவுண்ட் இல்லாமல் வந்து லேடி சூப்பர்ஸ்டாராக உயர்ந்துள்ளார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஜவான் வரட்டும்
நயன்தாராவைத் தான் முதலில் கரண் ஜோஹர் தனது நிகழ்ச்சிக்கு அழைத்தார் என்றும் அவர் மறுத்துவிட்ட காண்டு தான் இப்படி பேசியிருக்கிறார் என்றும் விளாசி வருகின்றனர். மேலும், அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படம் வெளியாகட்டும், பாலிவுட் மட்டுமல்ல டோட்டல் இந்தியாவிலேயே நம்பர் ஒன் நாயகியாக நயன்தாரா மாறுவார் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











