நயன்தாராவை எப்படி அப்படி சொல்லலாம்.. கேப்ஷனால் வந்த வினை.. விக்னேஷ் சிவனை கழுவி ஊற்றும் ரசிகாஸ்!

சென்னை: நயன்தாராவை நம்பர் 9 என குறிப்பிட்ட அவரது காதலர் விக்னேஷ் சிவனை ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

Recommended Video

Vignesh Shivan Controversial Tweet | Nayanthara | Quarantine

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக திகழ்ந்து வருகிறார். ரஜினி, அஜித், விஜய், தனுஷ், சூர்யா, ஜெயம் ரவி, விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு வருகிறார்.

கடைசியாக நடிகர் ரஜினிகாந்துடன் தர்பார் படத்தில் நடித்திருந்தார் நயன்தாரா. அதனை தொடர்ந்து ரஜினியின் அண்ணாத்த படத்திலும் நடித்து வருகிறார் நயன்தாரா.

நெருக்கமான போட்டோஸ்

நெருக்கமான போட்டோஸ்

ஏற்கனவே நயன்தாரா சிம்புவை காதலித்தார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று கூறப்பட்ட நிலையில், இருவரும் தனிமையில் இருந்த போட்டோக்களும் வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து இருவரின் காதலும் முறிந்தது.

காதல் முறிவு

காதல் முறிவு

இதனை தொடர்ந்து நடிகரும் இயக்குநருமான பிரபுதேவாவை காதலித்தார் நயன்தாரா. அவருக்காக சினிமாவுக்கு முழுக்கு போட முடிவு செய்தார் நயன்தாரா. பிரபுதேவாவுக்கு கோடி கணக்கில் செலவும் செய்தார். ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பால் அந்த காதலும் முறிந்தது.

விரைவில் திருமணம்

விரைவில் திருமணம்

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். இருவரும் அடிக்கடி வெளிநாடுகளில் ஓய்வை கழித்து வரும் போட்டோக்களை வெளியிட்டு வருகின்றனர். விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார்கள் என்றும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.

டிக்டாக் வீடியோக்கள்

டிக்டாக் வீடியோக்கள்

ஆனால் இதுகுறித்து உறுதியான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இந்நிலையில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் லிவிங் டுகெதரில் உள்ளனர். அடிக்கடி போட்டோக்களையும் டிக்டாக் வீடியோக்களையும் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். பிரதமர் மோடி மக்கள் ஊரடங்கை அறிவித்த போது மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் கைகளை தட்ட சொன்னார்.

ஒருவர் கை மீது ஒருவர்

ஒருவர் கை மீது ஒருவர்

அப்போது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஒருவர் கை மீது ஒருவர் கையை வைத்து ரொமான்டிக்காக கைகளை தட்டினர். அந்த போட்டோக்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதனை பார்த்த ரசிகர்கள் இந்த ரணகளத்திலேயேயும் உங்களுக்கு கிளுகிளுப்பு கேட்குதா என கேட்டு கலாய்த்தனர்.

தீபம் ஏற்றி

தீபம் ஏற்றி

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் 9 நிமிடங்களுக்கு வீட்டில் மின்விளக்குகளை அணைத்து தேசத்தின் ஒற்றுமையை காண்பிக்கும் வகையில் அகல் விளக்குகளை ஏற்றி வைக்க வேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தார். அதன்படி, நாடு முழுவதும் உள்ள மக்கள் மின் விளக்குகளை அணைத்து தீபம் ஏற்றினர்.

விக்கி நயன்

பல்வேறு சினிமா பிரபலங்களும் விளக்கேற்றிய போட்டோக்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றினர். இந்நிலையில் பிரபல இயக்குனரும் நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன், நயன்தாரா விளக்கை கையில் ஏந்தி இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். மேலும், அதை இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸாகவும் வைத்தார்.

9னுடன்..

அதில் 9 to 9:09 for 9 mins with 9 அதாவது 9 மணி நிமிடங்கள் 9னுடன் என்று பதிவிட்டிருந்தார். இதனை கண்ட நயன்தாராவின் ரசிகர்கள் இப்படி ஒரு முட்டாள்தனமான கேப்ஷன் தேவையா என்றும், இவன் எப்படிடா நயன்தாராவை கரெக்ட் பண்ணான் என்றும் விக்னேஷ் சிவனை விளாசி வருகின்றனர்.

விக்னேஷ் சிவனின் இந்த கேப்ஷனை பார்த்த இந்த ரசிகர், அந்த 9 to 9:09 , 9னுடன்.. பார்த்ததும் செத்துட்டேன்.. என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர், 9 to 9:09 for 9 mins with 9 ப்பா.. காவிய காதல் என்று கூறியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X