உன்னோட வேலை செய்யறது எப்பவுமே குஷி தங்கமே... உருகிய விக்னேஷ் சிவன்!
சென்னை : விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.
இந்தப் படம் டிசம்பரில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம் விஜய் சேதுபதி, சமந்தா மற்றும் நயன்தாராவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

காத்து வாக்குல ரெண்டு காதல் படம்
நடிகர் விஜய் சேதுபதி, சமந்தா மற்றும் நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல். நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கூட்டணி இந்தப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. கூடுதலாக சமந்தாவும் இந்தப் படத்தில் உள்ளார்.

அனிருத் இசை
அனிருத் இசையில் படத்தின் 2 பாடல்கள் முன்னதாக வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக படம் ஓடிடியில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது திரையரங்குகளில் ரிலீஸ் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முதல் பார்வை வெளியீடு
இந்நிலையில் தற்போது படத்தின் ப்ரமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். நேற்றைய தினம் விஜய் சேதுபதி, சமந்தா மற்றும் நயன்தாராவின் கேரக்டர் பெயர்கள் முதல் பார்வையுடன் வெளியிடப்பட்டுள்ளது. இதனை படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்க்ததில் வெளியிட்டுள்ளார்.

ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு
முதல் பிரதி அடிப்படையில் இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் -நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்துள்ள நிலையில், படத்திற்கான வரவேற்பு மற்றும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிகுதியாக காணப்படுகிறது. விஜய் சேதுபதி, கமந்தா மற்றும் நயன்தாரா இடையிலான காதல் இந்தப் படத்தில் கதைக்களமாக கொள்ளப்பட்டுள்ளது.

நயன்தாரா பர்ஸ்ட் லுக்
இந்நிலையில் ராம்போ என்ற கேரக்டரில் விஜய் சேதுபதியும், கதீஜா என்ற கேரக்டரில் சமந்தாவும் படத்தில் நடித்துள்ளதாக முன்னதாக விக்னேஷ் சிவன் அவர்களின் முதல் பார்வை போஸ்டர்களுடன் அறிவித்திருந்தார். தொடர்ந்து நயன்தாராவின் கேரக்டர் மற்றும் பர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டது.

கண்மணி கேரக்டர்
படத்தில் கண்மணி என்ற கேரக்டரில் நயன்தாரா நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நயன்தாராவின் போஸ்டரை வெளியிட்ட விக்னேஷ் சிவன் உன்னுடன் சேர்ந்து பணியாற்றுவது என்போதும் உற்சாகத்தை தரக்கூடியது தங்கமே என்று கேப்ஷனில் தெரிவித்துள்ளார். இந்த போஸ்டருக்கு எஸ்ஜே சூர்யா, அனிருத் உள்ளிட்டவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











