காதலருக்கு நயன்தாரா கொடுத்த காஸ்ட்லி பரிசு.. இத்தனை கோடிக்கா? என வாய் பிளக்கும் ரசிகர்கள்!
சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவரும் அடுத்த மாதம் ஜூன் 9ம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், சமீபத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் வெற்றிக்காக காதலர் விக்னேஷ் சிவனுக்கு பல கோடி மதிப்புள்ள காஸ்ட்லி பரிசை நயன்தாரா வழங்கி உள்ளாராம்.
அந்த பரிசுடன் இயக்குநர் விக்னேஷ் சிவன் சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படமும் டிரெண்டாகி வருகிறது.

மூன்றாவது காதல்
வல்லவன் படப்பிடிபின் போது நடிகர் சிம்புவை காதலித்து வந்த நடிகை நயன்தாரா அந்த காதல் செட் ஆகாத நிலையில், வில்லு படத்தின் ஷூட்டிங்கின் போது இயக்குநர் பிரபுதேவாவுடன் காதல் வலையில் விழுந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு சென்ற நிலையில், பிரபுதேவாவின் முதல் மனைவி பிரச்சனையை கிளப்பவே அந்த காதலும் முடிவுக்கு வந்தது. கடைசியாக நானும் ரவுடி தான் ஷூட்டிங்கில் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலிக்க தொடங்கினார் நயன்தாரா.

வெயிட் பண்ண நயன்தாரா
ஆனால், இந்த முறை எந்த பிரச்சனையும் வந்து விடக் கூடாது என்பதற்காக கடந்த 7 ஆண்டுகளாக தனக்காக விக்னேஷ் சிவன் காத்திருக்கிறாரா? என்கிற சோதனையையே மறைமுகமாக நடத்தி உள்ளார் என பேச்சுக்கள் கிளம்பி உள்ளன. அனைத்திலும் விக்னேஷ் சிவன் பாஸ் ஆகி அத்தனை லவ்வையும் நயன்தாரா மீது செலுத்திய நிலையில், அவருடன் நிச்சயம் செய்து கொண்டு தற்போது திருமணத்திற்கும் தயாராகி விட்டார் எனக் கூறுகின்றனர்.

திருப்பதியில் திருமணம்
காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்ற நிலையில், நயன்தாரா ரொம்பவே ஹேப்பி ஆகி உள்ளார். விக்னேஷ் சிவன் இத்தனை ஆண்டுகளாக காத்துக் கிடந்த திருமணத்திற்கும் ஒரு வழியாக ஓகே சொல்லி விட்டார் எனக் கூறப்படுகிறது. வரும் ஜூன் 9ம் தேதி திருப்பதியில் நடைபெற உள்ள தங்களின் திருமணத்திற்கான ஏற்பாடுகளையும் இருவரும் நேரில் சென்று பார்த்து வந்த புகைப்படங்களும் டிரெண்டாகின.

காஸ்ட்லி கார்
காத்துவாக்குல ரெண்டு காதல் வெற்றி மற்றும் ஏகே 62 படத்தை இயக்க கிடைத்த வாய்ப்பு என இயக்குநர் விக்னேஷ் சிவன் பட்டையை கிளப்பி வரும் நிலையில், தனது வருங்கால கணவருக்கு சிகப்பு நிற காஸ்ட்லி ஃபெராரி காரை பரிசளித்துள்ளாராம் நடிகை நயன்தாரா. சமீபத்தில் அந்த காருடன் நின்றபடி போஸ் கொடுத்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார் விக்னேஷ் சிவன்.

7.5 கோடியா
விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா பரிசாக கொடுத்த அந்த சொகுசு காரின் விலை 7.5 கோடி என்பது தான் ரசிகர்களை தலை சுற்ற செய்துள்ளது. அஜித்தின் ஏகே 62 படத்தின் ஷூட்டிங்கிற்கு கெத்தாக தனது வருங்கால கணவர் போய் இறங்க வேண்டும் என்பதற்காக இப்படியொரு பரிசை கொடுத்துள்ளாரா நயன்தாரா என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். ஆனால், இருவரும் இணைந்து தான் இந்த காரை வாங்கி உள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும் இருவரும் ஒன்றாகத் தானே இணைந்து இந்த காரில் பயணிக்கப் போகின்றனர்.


Click it and Unblock the Notifications











