கணவர் விக்னேஷ் சிவன் படத்தில் மீண்டும் இணையும் நயன்தாரா.. பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியா?
சென்னை : இயக்குநர் விக்னேஷ் சிவன் -நயன்தாரா ஜோடி இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த நிறுவனத்தின்மூலம் நெற்றிக்கண், கூழாங்கல், காத்து வாக்குல ரெண்டு காதல் என அடுத்தடுத்த படங்களை தயாரித்த விக்னேஷ் சிவன் -நயன்தாரா தற்போது குஜராத்தியில் சுப் யாத்ரா என்ற படத்தை தயாரித்துள்ளனர்.
ஏகே 62 படத்தை இயக்கும் வாய்ப்பு கைநழுவிப் போன நிலையில், அடுத்ததாக பிரதீப்பை ஹீரோவாக வைத்து விக்னேஷ் சிவன் படமியக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விக்னேஷ் சிவன் -நயன்தாரா ஜோடி
இயக்குநர் விக்னேஷ் சிவன் -நயன்தாரா ஜோடி கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து கடந்த ஆண்டில் திருமணம் செய்த நிலையில், வாடகைத்தாய் முறையில் இரு குழந்தைகளுக்கும் பெற்றோர் ஆகியுள்ளனர். இவர்களது பதிவுத்திருமணம், வாடகைத்தாய் விவகாரம் ஆகியவை சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், அவை குறித்த விளக்கங்களை அளித்தனர். தொடர்ந்து தற்போது ஜவான், இறைவன் என அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார் நயன்தாரா.

ஏகே62 படத்திலிருந்து நீக்கம்
இதனிடையே ஏகே62 படத்தை இயக்கவிருந்தார் விக்னேஷ் சிவன். இதுகுறித்து துணிவு படத்தின் சூட்டிங்கின்போதே அறிவிப்பு வெளியானது. லைகா நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கவிருந்த நிலையில், இந்த பிராஜெக்ட்டிலிருந்து நீக்கப்பட்டார் விக்னேஷ் சிவன். இதனால் மனஉளைச்சலில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா உள்ளான நிலையில், விக்னேஷ் சிவனின் அடுத்தப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிப்பில் கவனம் செலுத்தும் பிரதீப்
இந்நிலையில் இயக்குநராக இருந்து லவ் டுடே படம் மூலம் நடிகராகவும் தன்னை நிரூபித்துள்ள பிரதீப் ரங்கநாதனை வைத்து தனது அடுத்தப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லவ் டுடே படம் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்துள்ள நிலையில் பிரதீப் அடுத்ததாக எந்தப் படத்தை இயக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அவர் அடுத்ததாக படமியக்கப் போவதில்லை என்றும் நடிப்பில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

பிரதீப் ரங்கநாதன் -விக்னேஷ் சிவன் கூட்டணி
இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் நாயகனாக இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா முக்கியமான கேரக்டரில் நடிக்க கமிட்டாகியுள்ளதாகவும் ஆனால் பிரதீப்பிற்கு அவர் ஜோடியில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அப்டேட் மற்றும் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை நயன்தாரா கையில் தற்போது இரண்டு படங்கள் உள்ள நிலையில் அடுத்ததாக நடிகர் ஜெய்யுடன் 75வது படத்தில் இணையவுள்ளார். இதனிடையே தன்னுடைய கணவர் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

குஜராத்தில் படம் தயாரிப்பு
நடிப்பில் மட்டுமில்லாமல் தயாரிப்பிலும் நயன்தாரா தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அடுத்தடுத்து நெற்றிக்கண், கூழாங்கல், காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்திருந்தனர். அடுத்ததாக குஜராத்தி மொழியிலும் தங்களது தயாரிப்பில் சுப் யாத்ரா என்ற படத்தை தயாரித்துள்ளனர். இந்தப் படம் வரும் ஏப்ரல் 28ம் தேதி ரிலீசாகவுள்ளது.


Click it and Unblock the Notifications











