Nayanthara - என்ட்ரி கொடுத்த நயன்தாரா.. ஒரே நாளில் கத்ரீனா கைஃபை ஓரங்கட்டிய தரமான சம்பவம்

சென்னை: Nayanthara (நயன்தாரா) இன்ஸ்டாகிராமில் என்ட்ரி கொடுத்திருக்கும் நயன்தாரா கத்ரீனா கைஃபை ஒரே நாளில் ஓரங்கட்டியிருக்கிறார்.

கேரளாவில் ஒரு டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த நயன்தாரா. தமிழில் ஐயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படம் ஹிட்டாகி அவரது நடிப்புக்கும் ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்தது. அதனையடுத்து ரஜினிகாந்த்துடன் சந்திரமுகி படத்தில் நடித்து முன்னணி நடிகை வரிசையில் இணைந்தார்.

 Nayanthara Got 2.2 Million followers at Instagram within 3 Days

இரண்டாவது இன்னிங்ஸ்: தொடர்ந்து சில பிரச்னைகளை சந்தித்த அவர் தனது இரண்டாவது இன்னிங்ஸை மிகவும் கவனத்தோடு தொடங்கினார் . அந்தவகையில் அவர் நடித்த படங்கள் ஹிட்டாக லேடி சூப்பர் ஸ்டாராக மாறினார். இதற்கிடையே நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவனை காதலித்தார். இருவரது காதலும் பல வருடங்கள் கழித்து கடந்த வருடம் திருமணத்தில் முடிந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

இப்போதைய படங்கள்: நயன்தாரா இப்போது தமிழில் தனது 75ஆவது படத்திலும், ஜெயம் ரவியுடன் இறைவன் படத்திலும் நடிக்கவிருக்கிறார். அதேபோல் ஹிந்தியில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்திலும் நடித்திருக்கிறார். படமானது செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் ட்ரெய்லர் அட்டகாசமாக இருப்பதால் கண்டிப்பாக ஜவான் ஹிட்டடித்துவிடும் என்ற நம்பிக்கை அவரிடமும், அவரது ரசிகரக்ளிடமும் இருக்கிறது.

இன்ஸ்டா என்ட்ரி: சூழல் இப்படி இருக்க எப்போதும் சமூக வலைதளங்கள், பேட்டிகளிலிருந்து ஒதுங்கியிருக்கும் நயன்தாரா சில நாட்களுக்கு முன்னதாக திடீரென இன்ஸ்டாகிராமில் என்ட்ரி கொடுத்தார். தன்னுடைய முதல் போஸ்ட்டில் வந்துட்டேனு சொல்லு என்ற கேப்ஷனோடு தனது இரண்டு மகன்களை தூக்கிக்கொண்டு நடந்துவரும் வீடியோவை வெளியிட்டிருந்தார்.

எல்லாம் அதற்காகத்தான்: இதனையடுத்து ஜவான் படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஜவான் தொடர்பான போஸ்ட்களை போட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் ப்ரோமோஷனுக்கு வர மறுக்கும் நயன் விவரமாக சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கி ப்ரோமோஷன் செய்ய தொடங்கிவிட்டார். ஹிந்தியில் பலமாக கால் ஊன்றுவதற்கு ஷாருக்கான் போன்றோரின் சப்போர்ட் வேண்டும். அதை உணர்ந்ததால்தான் சோஷியல் மீடியா கணக்கு ஆரம்பித்திருக்கிறார் என ரசிகர்கள் கூறினர்.

ஃபாலோயர்ஸ்: இந்நிலையில் நயன்தாரா புதிய பெருமையை பெற்றிருக்கிறார். அதன்படி இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கிய 24 மணி நேரத்தில் கத்ரீனா கைஃப் மட்டுமே 1 மில்லியன் ஃபாலோயர்களை பெற்றிருந்தார். தற்போது அந்த பெருமை நயன்தாராவுக்கு கிடைத்திருக்கிறது. இதுவரை அவருக்கு 2.2. ஃபாலோயர்கள் இருக்கின்றனர். அவர் கணக்கு ஆரம்பித்து மூன்று நாட்கள் மட்டுமே ஆவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X