Nayanthara Salary - ஜவான் படத்தில் நயன்தாரா சம்பளம் எவ்வளவு தெரியுமா?.. ஆடிப்போன திரையுலகம்
மும்பை: ஜவான் படத்துக்காக நடிகை நயன்தாராவுக்கும் கொடுக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் சம்பளம் குறித்த தகவல் ஒட்டுமொத்த திரையுலகத்தையும் ஆட்டம் காண செய்திருக்கிறது.
ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்துவிட்டு ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. மௌன ராகத்தின் அப்டேட் வெர்ஷன் என அந்தப் படம் விமர்சிக்கப்பட்டாலும் படம் மெகா ஹிட்டானது. முதல் படத்தையே மெகா ஹிட்டாக கொடுத்துவிட்டால் அந்த இயக்குநரின் கிராஃப் உச்சம் சென்று விடும் என்ற கோடம்பாகத்தின் விதியின்படி அட்லீயின் கிராஃப் ராஜா ராணி படத்துக்கு பிக்கப் ஆனது.

விஜய்யுடன் செய்த சம்பவங்கள்: ராஜா ராணி ஹிட்டுக்கு பிறகு விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கினார். அந்தப் படமும் வேறு படத்திலிருந்து உருவப்பட்டது என்று விமர்சனத்தை சந்தித்தாலும் அவரின் மேக்கிங் படத்தை காப்பாற்றியது. இதனால் தெறி ஹிட் ஆனது. அதனையடுத்து விஜய்யுடன் மெர்சல், பிகில் படங்கள் செய்தார் அட்லீ. இதில் மெர்சல் மெகா ஹிட்டாக பிகில் தோல்வி படமாக அமைந்தது.
ஷாருக்கானுடன் அட்லீ: மொத்தமே தனது கேரியரில் நான்கு படங்களை இயக்கிய அட்லீக்கு அடித்தது ஜாக்பாட். ஆம், வெகு சில படங்களிலேயே ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. படத்துக்கு ஜவான் என பெயரிடப்பட்டுள்ளது. மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ், பிரபுதேவா வரிசையில் நேரடி ஹிந்தி படத்தை இயக்கும் தமிழ் இயக்குநர் என்ற பெருமையை தற்போது பெற்றிருக்கிறார் அட்லீ.
விஜய் சேதுபதி, நயன்தாரா: ஜவான் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். பக்கா ஆக்ஷன் படமாக உருவாகிவரும் ஜவான் நிச்சயம் அட்லீயின் சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும் என அவரது ரசிகர்கள் கருதுகின்றனர். அதை உறுதிப்படுத்தும் விதமாக சில நொடி ஆக்ஷன் காட்சிகள் சமீபத்தில் இணையத்தில் லீக்காகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
சம்பளம் எவ்வளவு தெரியுமா: இந்நிலையில் ஜவான் படத்தில் நடிப்பதற்காக நயன்தாராவுக்கு வழங்கப்பட்டிருக்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அவருக்கு எட்டு கோடி ரூபாய்வரை சம்பளம் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. தென்னிந்திய சினிமாவில் ஒரு நடிகை 8 கோடி ரூபாயை நெருங்கியிருப்பது இதுதான் முதல்முறை. நயனுக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் என கேள்விப்பட்ட தென்னிந்திய திரையுலகம் மூக்கின் மேல் விரலை வைத்து ஆச்சரியமாக பார்த்துவருகிறது.

மேலும் இப்போது அவர் 8 கோடி ரூபாய் சம்பளத்தை தொட்டிருக்கிறார். ஜவான் ஹிட்டடித்து மீண்டும் நயன் தமிழுக்கு திரும்பும்போது அவர் தனது சம்பளத்தை 10 கோடி ரூபாயாக உயர்த்திவிட்டால் என்ன செய்வது என்று ஆட்டம் கண்டிருக்கிறது கோலிவுட் திரையுலகம்.
விறுவிறு ஷூட்டிங்: முன்னதாக, ஜவான் படத்தை விரைந்து முடிப்பதற்கு அட்லீ தீவிர முனைப்போடு செயலாற்றிவருகிறார். இதனால் படத்தின் ஷூட்டிங்கை மும்முரமாக நடத்திவருகிறார். படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன்பு சென்னையிலும் நடைபெற்றது. அப்போது விஜய் ஷாருக்கானை நேரில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
ஜவான் படத்தில் ஷாருக்கான் மற்றும் நயன்தாராவுக்கான காட்சிகளை 99 சதவீதம் முடித்துவிட்ட அட்லீ இப்போது பாடல்களை படமாக்கும் வேலையில் இறங்கியிருக்கிறாராம். சமீபத்தில்கூட மும்பை பாந்த்ரா ஹோட்டலில் ஷூட்டிங் நடந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











