காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து கோவிட் -19 தடுப்பூசி போட்டுக் கொண்ட லேடி சூப்பர்ஸ்டார்
சென்னை : கோவிட் -19ன் இரண்டாவது அலை இந்திய அளவில் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இது ஒருபுறம் இருந்தாலும் மக்கள் அதிகளவில் கோவிட் -19 தடுப்பூசியை மறுபுறம் போட்டு வருகின்றனர்.
திரைத்துறையினரும் அதிகளவில் தடுப்பூசியை போட்டுக் கொள்வதுடன் பொதுமக்களை போட்டுக் கொள்ள அறிவுறுத்தி வருகின்றனர்.

அதிக பாதிப்புகள்
இந்தியாவில் கோவிட் -19 முதல் அலை ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கு முன்பாகவே இரண்டாவது அலை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தினந்தோறும் இதன் பாதிப்பில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

அதிகரித்துள்ள உயிரிழப்புகள்
இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட நிலையிலும், மறுபுறம் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே காணப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆயினும் தொடர்ந்து கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்தே காணப்படுகிறது.

அதிகமான தடுப்பூசிகள்
நேற்றைய தினம் 4500க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை இந்தியா கண்டுள்ளது. மறுபுறம் இதற்கான தடுப்பூசிகளை மக்கள் அதிகமான எண்ணிக்கையில் போட்டு வருகின்றனர். மேலும் இந்திய அளவில் பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் அதிகளவில் கொரோனா தடுப்பூசியை போட்டு வருகின்றனர்.

முதல் டோசை போட்ட நயன்தாரா
மேலும் அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, மக்கள் அதிகளவில் போட்டுக் கொள்ளவும் அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகை நயன்தாரா தன்னுடைய முதல் டோசை போட்டுக் கொண்டுள்ளார். அவருடன் விக்னேஷ் சிவனும் தன்னுடைய கொரோனா முதல் டோசை போட்டுக் கொண்டார்.

விரைவில் இணையும் நயன்
சென்னையில் உள்ள குமரன் மருத்துவமனையில் இவர்கள் இருவரும் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டனர். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துவரும் நயன்தாரா அடுத்ததாக ரஜினிகாந்தின் அண்ணாத்தே படத்தின் படப்பிடிப்பில் விரைவில் இணையவுள்ளார்.


Click it and Unblock the Notifications











