Nayanthara - சமந்தாவுக்கு நயன்தாரா கொடுத்த கிஃப்ட்.. என்ன கொடுத்திருக்காரு தெரியுமா?

சென்னை: Nayanthara (நயன்தாரா) நடிகை சமந்தாவுக்கு நயன்தாரா கிஃப்ட் ஒன்றை பரிசாக கொடுத்திருக்கிறார்.

தமிழ் சினிமாவிலிருந்து தனது திரை வாழ்க்கையை தொடங்கியவர் நயன்தாரா. அழகு மட்டுமின்றி திறமையும் கொண்டிருப்பதால் அவரை தமிழ் திரையுலகம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறது. காதல் விவகாரங்களில் சிக்கி பல தனிப்பட்ட தாக்குதல்களை சந்தித்தவர் அவர். ஆனால் அதையெல்லாம் கண்டு அஞ்சாமல் ஃபீனிக்ஸ் பறவையாக மீண்டெழுந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார்.

Nayanthara has given a gift to actress Samantha.

திருமணம்: நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவனை காதலித்த நயன்தாரா கடந்த வருடம் அவரை திருமணம் செய்துகொண்டார். பிறகு வாடகை தாய் மூலம் இரண்டு மகன்களை பெற்றுக்கொண்டனர். உயிர், உலக் என்று மகன்களுக்கு பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. திருமணம் செய்து குழந்தை பெற்றாலும் தனது நடிப்பு பயணத்தை தீவிரமாக தொடர்ந்துவருகிறார் நயன்தாரா. அவருக்கு விக்னேஷ் சிவனும் முழு சப்போர்ட் செய்துவருகிறர்.

ஹிந்தியில் என்ட்ரி: இத்தனை வருடங்கள் தமிழ், தெலுங்கில் கலக்கி அவர் தற்போது ஜவான் படத்தின் முலம் ஹிந்தியில் என்ட்ரி ஆகியிருக்கிறார். அட்லீ இயக்கத்தில் உருவாகியிருக்கும் அந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்தார் இந்தப் படம் வெற்றி பெற்றால் பாலவுட்டிலும் ஒரு பெரிய ரவுண்டு வரலாம் என்று கணக்கு போட்டிருந்தார். அவர் கணக்குபடி ஜவான் படம் பாலிவுட்டில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. எனவே அடுத்தடுத்து ஹிந்தி படங்களில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்: படத்தில் மட்டுமின்றி தொழிலிலும் நயன் தீவிர கவனம் செலுத்திவருகிறார்.சமீபத்தில்கூட 9 ஸ்கின் என்கிற பெயரில் ஃபேஸ் க்ரீம்கள் தயாரிக்கும் கம்பெனியை தொடங்கினார். அதற்காக அவர் எடுத்துக்கொண்ட ஃபோட்டோக்களும் படு வைரலாகின. மேலும் கேரளாவில் ஒரு அப்பார்ட்மெண்ட்டை கட்டி வாடகைக்கு விட அவர் திட்டமிட்டிருக்கிறார் என்றும் ஒரு தகவல் உலாவுகிறது.

சமந்தாவுக்கு கொடுத்த கிஃப்ட்: இந்நிலையில் சமந்தாவுக்கு நயன் தாரா கிஃப்ட் ஒன்றை கொடுத்திருக்கிறார். அதாவது தனது 9 ஸ்கின் கம்பெனியின் ப்ராடெக்ட்டை சமந்தாவுக்கு கொடுத்திருக்கிறார். இதுகுறித்து சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், " இந்த தயாரிப்புகளை பயன்படுத்த ஆவலாக உள்ளேன். 9 ஸ்கின் கி ஆல் தி வெரி பெஸ்ட்" என குறிப்பிட்டுள்ளார். சமந்தாவும் நயனும் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X