ராதாரவி, எஸ்.வி. சேகர்: ஒரே கல்லில் 2 மாங்காய் அடித்த நயன்தாரா
Recommended Video

சென்னை: ஐரா ஸ்னீக்பீக் மூலம் நயன்தாரா ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ளார்.
கொலையுதிர் காலம் பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் ராதாரவி நயன்தாராவை பற்றி தரக்குறைவாக பேசினார். நயன்தாரா பேயாகவும், சீதாவாகவும் நடித்ததை கேவலமாக விமர்சித்தார்.
இந்நிலையில் நயன்தாரா நடித்துள்ள ஐரா படத்தின் ஸ்னீக்பீக் இன்று வெளியாகியுள்ளது.
நயன்தாரா
ஐரா ஸ்னீக்பீக்கில், நீ மீடியாவில் தானே இருக்க, 4,5 பேருடன் இருக்காம இந்த பொசிஷனுக்கு வந்திருப்பியா என்று ஒருவர் ஏளனமாக கேட்க நயன்தாராவோ, உன்னை மாதிரி ஆளுங்களால தான் குடும்பத்தை சப்போர்ட் பண்ணனும்னு நினைக்கிற பொம்பளங்க கூட வெளியே போய் நிம்மதியா வேலை செய்ய முடியல என்கிறார்.

பட வாய்ப்பு
பட வாய்ப்பு பெறுவது தொடர்பாக நயன்தாராவை விமர்சித்த ராதாரவிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது ஸ்னீக்பீக். மேலும் நயன்தாராவின் பதில் நடிகர் எஸ்.வி. சேகருக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள்
நடிகரும், பாஜக நிர்வாகியுமான எஸ்.வி. சேகர் பெண் பத்திரிகையாளர்கள் பற்றி தரக்குறைவாக ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டதை தான் ஐரா வீடியோவில் காட்டியுள்ளனர். அதனால் அவருக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் அந்த வீடியோ உள்ளது. ஆக, ஒரே கல்லில் 2 மாங்காய் அடித்துவிட்டார் நயன்தாரா.

படம்
ஐரா படத்தை தயாரித்துள்ள கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் ராதாரவிக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு இனி அவரை தங்களின் படங்களில் நடிக்க வைக்கப் போவது இல்லை என்று தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











