பூதாகரமாகும் வாடகைத்தாய் விவகாரம்...கூலாக ஷூட்டிங்கிற்கு கிளம்பிய நயன்தாரா!
சென்னை : வாடகைத்தாய் விவகாரம் பூதாகரமாகி வரும் நிலையில், இதைப்பற்றி கண்டுகொள்ளாமல் நயன்தாரா ஷூட்டிங்கிற்கு கிளம்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த வாரம் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில், பாதங்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு அப்பா அம்மாவாகிவிட்டதாக தெரிவித்து இருந்தார்.
இந்த தகவல் வெளியான சிறிது நேரத்திலேயே இணையத்தில் இது மிகப்பெரிய பேசுபொருளாக மாறி, கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக இது ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது.

நயன்தாரா சர்ச்சை
நயன்தாரா எந்த அளவுக்கு புகழின் உச்சியில் இருக்கிறாரோ அதே அளவுக்கு சர்ச்சைக்கும் பஞ்சமே இல்லாமல் இருக்கிறார். சினிமாவில் அவர் நுழைந்தது முதல் தற்போது அவரை பற்றி சர்ச்சைகள் ஏதே ஒரு வகையில் உலகிக் கொண்டுதான் இருக்கிறது. நானும் ரௌவுடிதான் படத்தில் நடித்த போது விக்கியும்,நயன்தாராவும் காதலிக்கத் தொடங்கினர்.

6 ஆண்டுகளாக ரிலேஷன்ஷிப்
இதையடுத்து, 6 ஆண்டுகளாக இருவரும் லிவ்விங் டு கெதரில் வாழ்ந்து வந்ததால், சர்ச்சையில் சிக்கினர். இதையடுத்து,கடந்த ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டு, ஒன்றுக்கு இரண்டுமுறை ஹனிமூன் சென்று போட்டோவை இணையத்தில் ஷேர் செய்து ரசிகர்களை மகிழ்ச்சியில் வைத்திருந்த இந்த ஜோடி தற்போது பெற்றோராகிவிட்டதாக ஒரு தகவலை கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தனர்.

4 மாதத்தில் குழந்தையா?
திருமணமான 4 மாதத்திற்குள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள என்ன அவசரம், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற பல கட்டுப்பாடுகள் இந்தியாவில் உள்ள நிலையில், சரியான சட்ட விதியுடன் குழந்தை பிறந்ததா? அதை அவர்கள் அதை சரியாக பின்பற்றினார்களா என்று மிகப்பெரிய விவாதமே நடந்து வருகிறது.

வாய் திறக்காத நயன்தாரா?
வாடகத்தாய் முறைகுறித்து ஊடகம்,சோஷியல் மீடியாவில் பட்டிமன்றமே நடத்தும் அளவுக்கு விவாதம் நடைபெற்று வரும் நேரத்தில், நடிகை நயன்தாரா இதுகுறித்து வாய் திறக்காமல் கூலாக ஜவான் படப்பிடிப்புக்காக ராஜஸ்தானுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜவான் படத்தின் ஷூட்டிங் 30 நாட்களாக சென்னையில் நடைபெற்று முடிந்தது. 20 நாட்கள் இந்த படப்பிடிப்பு நடைபெறும் என்றும், இத்துடன் நயன்தாரா ஷாருக்கான் பங்கேற்கும் காட்சிகள் நிறைவுபெறும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.


Click it and Unblock the Notifications











