திருமண கொண்டாட்டம் முடிந்தது.. பேக் டு பாஃர்ம்.. நயன்- விக்கி ஜோடி எங்கே?..
மும்பை : திருமண கொண்டாட்டம் முடிந்ததை அடுத்து நயன்தாரா மீண்டும் பாஃர்முக்கு திரும்பி உள்ளார்.
அழகான காதல் ஜோடியாக வலம் வந்து கொண்டிருந்த நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடிக்கு ஜூன் மாதம் 9ந் தேதி மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்ற இந்த காதல் ஜோடி தற்போது ஊர் திரும்பி உள்ளனர்.
நயன்தாரா, அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தில்,பிரியாமணி, சன்யா மல்ஹோத்ரா, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் நயன்தாரா பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார்.

இயக்குநர்
பாலிவுட்டில் காலடி எடுத்துவைத்துள்ள அட்லீ ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார். 2020ம் ஆண்டு இப்படத்தின் பேச்சுவார்த்தை தொடங்கிய நிலையில் கொரோனாவின் தாக்கம், ஷாருக்கானின் மகன் ஆர்யா கான் போதை வழக்கில் கைது செய்யப்பட்டது என பல பிரச்சனை காரணமாக படம் தாமதமாகிக் கொண்டே சென்றன. ஒரு கட்டத்தில் அட்லீயின் பாலிவுட் கனவு தகர்ந்து விட்டதாகவும் இணையத்தில் செய்திகள் பரவின.

மிரட்டலான டீசர்
இதையடுத்து, ஜவான் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகி அனைவரையும் மிரட்டியது. அந்த டீசரில், ஷாருக்கான் முகத்தை பாதி மூடிய நிலையில் ரத்தக் காயங்களுடன் பழமையான இடத்தில் ஆக்ஷனுக்கு தயாராவது போன்று டைட்டில் டீசர் வீடியோ வெளியாகி இருந்தது. அடுத்த ஆண்டு ஜூன் 2-ம் தேதி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பான் இந்திய படமாக இப்படம் வெளியாக உள்ளது.

இரட்டை வேடத்தில்
இப்படத்தில் ஷாருக் மற்றும் நயன்தாராவைத் தவிர சன்யா மல்ஹோத்ராவும் நடிக்கவுள்ளார். மேலும், இப்படத்தில், நயன்தாரா விசாரணை அதிகாரியாக நடிக்கிறார், அதே நேரத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தளபதி விஜய் மற்றும் தீபிகா படுகோனே இருவரும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஷாருக்கன் மற்றும் அவரது மனைவி கௌரி கானின் ரெட் சில்லிஸ் எண்டெர்டெயின்மெண்ட் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.
Recommended Video

படப்பிடிப்பில் நயன்தாரா
திருமணம் முடிந்த கையோடு திருப்பதி, கேரளா, ஹனிமூனுக்காக தாய்லாந்து சென்ற நயன்தாரா, ஹனிமூனை முடித்துவிட்டு மும்பையில் நடைபெற்று வரும் ஜவான் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். நயன்தாராவும் ஷாருக்கானும் நடிக்கும் படப்பிடிப்பு காட்சி இன்று படமாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜவான் படப்பிடிப்புத்தளத்திற்கு வந்த நயன்தாராவுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











