Nayanthara - நயன்தாரா உதைக்க கற்றுக்கொண்டார்.. உஷார் விக்னேஷ் - ஷாருக்கான் எச்சரிக்கை
சென்னை: ஜவான் படத்தின் ட்ரெய்லரை பாராட்டிய விக்னேஷ் சிவனுக்கு ஷாருக்கான் செய்திருக்கும் ரிப்ளை ட்ரெண்டாகியுள்ளது.
வாழ்க்கையில் எவ்வளவு பிரச்னைகளை சந்தித்தாலும் அதையெல்லாம் மீறி இப்போது கோலிவுட்டில் டாப் ஹீரோயினாக வலம் வருபவர் நயன்தாரா. இரண்டு காதல் தோல்விகளை அவர் சந்தித்தபோது தனிப்பட்ட முறையில் விமர்சனங்களை சந்தித்தார். இருப்பினும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலிக்க தொடங்கினார்.

திருமணம்: பல வருடங்கள் காதலித்த இரண்டு பேரும் கடந்த வருடம் ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம் செய்துகொண்டனர். பிரமாண்டமாக திருமணம் நடத்தியது மட்டுமில்லாமல் தமிழ்நாடு முழுவதும் இருக்கும் பல்லாயிரக்கணக்கான ஆதரவற்றவர்களுக்கு உணவு அளித்து பலரது பாராட்டையும் பெற்றனர். திருமணம் ஆன நான்கு மாதங்களில் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தனர்.
உலக், உயிர்: நயன் எதை செய்தாலும் அதை சர்ச்சையாக்குவது வழக்கமாகிவிட்டதால் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதையும் சர்ச்சையாக்கினார்கள். ஆனால் அதுகுறித்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் வாடகை தாய் விவாகரத்தில் எந்த விதிமீறலும் நிகழவில்லை என்பது உறுதியானது. இதனையடுத்து ஒரு குழந்தைக்கு உலக் தெய்வீக் N சிவன் என்றும், மற்றொரு குழந்தைக்கு உயிர் ருத்ரோனில் N சிவன் என்றும் பெயர் வைத்தார்கள்.
நயனின் தற்போதைய படங்கள்: நயன் தாரா குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் பொறுப்பான தாயாக இருந்தாலும் திரைப்படங்களிலும் தனது கவனத்தை செலுத்திவருகிறார். அப்படி அவர் தமிழில் தனது 75ஆவது படத்தில் நடிக்கவிருக்கிறார். அதேபோல் ஹிந்தியில் அட்லீ இயக்கத்தில் ஷாருக் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜவான் படத்திலும் நடித்திருக்கிறார்.
ஜவான் ட்ரெய்லர்: படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி சக்கைப்போடு போடப்பட்டுவருகிறது. இதுவரை 112 மில்லியன் பார்வைகளை கடந்திருக்கிறது ட்ரெய்லர். படம் ஆக்ஷன் மோடில் உருவாகியிருக்கிறது. மேலும் ட்ரெய்லரில் நயன்தாராவின் ஆக்ஷன் காட்சிகளும் இடம் பெற்றிருக்கின்றன. பில்லா படத்துக்கு பிறகு நயன் இப்படி ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
விக்னேஷ் சிவன் வாழ்த்து: இந்நிலையில் ட்ரெய்லரை பாராட்டி விக்னேஷ் சிவன், பாலிவுட்டில் அறிமுகமாகும் படத்திலேயே சிறப்பாக பணியாற்றி இருக்கும் இயக்குனர் அட்லியை நினைத்து பெருமைப்படாமல் இருக்க முடியவில்லை. முன்னோட்ட வீடியோ சர்வதேச தரத்தில் உள்ளது. அட்லியின் பொறுமையும் கடின உழைப்பும் நன்றாக தெரிகிறது. எனது சார்பாக மிகுந்த பாராட்டும் அரவணைப்பும். நயன்தாராவின் பாலிவுட் அறிமுகமே ஷாருக்கானுடன் இருப்பது கனவு நினைவான மாதிரி உள்ளது. அனிருத் மற்றும் விஜய் சேதுபதிக்கு எனது பாராட்டுக்கள்" என ட்வீட் செய்திருந்தார்.
ஷாருக் பதில்: இதற்கு பதிலளித்த ஷாருக்கான், விக்னேஷ் சிவன் உங்களின் அன்புக்கு நன்றி. நயன்தாரா அருமையானவர்... ஆனால் இதை நான் யாரிடம் சொல்கிறேன்.. உங்களுக்கு முன்பே தெரியும்! ஆனால், அவர் இப்போது நன்றாக அடிக்கவும் உதைக்கவும் கற்றுக்கொண்டார். ஜாக்கிரதையாக இருங்கள்" என குறிப்பிட்டிருக்கிறார். ஷாருக்கானின் இந்த ஜாலி ட்வீட் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications