Nayanthara - எல்லோரும் வழிய விடுங்க.. ஒரே படம்தான் ஓஹோ வாழ்க்கை.. நயன்தாராதான் நம்பர் 1

மும்பை: Nayanthara (நயன்தாரா) ஷாருக்கான், தீபிகா படுகோனே உள்ளிட்டோரை பின்னுக்கு தள்ளி நடிகை நயன்தாரா நம்பர் 1 இடத்தை பிடித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவிலிருந்து தனது திரை வாழ்க்கையை தொடங்கியவர் நயன்தாரா. அழகு மட்டுமின்றி திறமையும் கொண்டிருப்பதால் அவரை தமிழ் திரையுலகம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறது. காதல் விவகாரங்களில் சிக்கி பல தனிப்பட்ட தாக்குதல்களை சந்தித்தவர் அவர். ஆனால் அதையெல்லாம் கண்டு அஞ்சாமல் ஃபீனிக்ஸ் பறவையாக மீண்டெழுந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார்.

Nayanthara has topped this weeks list of popular people in India as per IMDB ratings

திருமணம்: நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவனை காதலித்த நயன் கடந்த வருடம் அவரை திருமணம் செய்துகொண்டார். பிறகு வாடகை தாய் மூலம் இரண்டு மகன்களை பெற்றுக்கொண்டனர். உயிர், உலக் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. திருமணம் செய்து குழந்தை பெற்றாலும் தனது நடிப்பு பயணத்தை தீவிரமாக தொடர்ந்துவருகிறார் நயன் தாரா.

ஹிந்தியில் என்ட்ரி: இத்தனை வருடங்கள் தமிழ், தெலுங்கில் கலக்கி அவர் தற்போது ஜவான் படத்தின் முலம் ஹிந்தியில் என்ட்ரி ஆகியிருக்கிறார். அட்லீ இயக்கத்தில் உருவாகியிருக்கும் அந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்தார் இந்தப் படம் வெற்றி பெற்றால் பாலவுட்டிலும் ஒரு பெரிய ரவுண்டு வரலாம் என்று கணக்கு போட்டிருக்கிறார். அதன் வெளிப்பாடுதான் இன்ஸ்டாகிராமில் ஜவான் ப்ரோமோஷனுக்காக கணக்கு ஆரம்பித்தது.

சூப்பர் நயன்: அவர் எதிர்பார்த்தபடியே ஜவான் படம் சூப்பர் ஹிட்டடித்திருக்கிறது. அதிலும் நயன் தாராவின் நடிப்பு அப்ளாஸை அள்ளியிருக்கிறது. பில்லா படத்துக்கு பிறகு ஆக்‌ஷன் காட்சிகளில் பட்டையை கிளப்பியிருக்கிறார். இந்தப் படத்தில் சில பல குறைகள் கூறப்பட்டாலும் பெரும்பாலானோர் சொன்ன பொதுவான விஷயம் நயனின் நடிப்புதான். அவரை இப்படி பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டதாக கூறினர் ரசிகர்கள்.

Nayanthara has topped this weeks list of popular people in India as per IMDB ratings

நம்பர் 1: இந்நிலையில் நயன் தாரா இந்திய அளவில் நம்பர் 1 இடத்தை பிடித்திருக்கிறார். அதாவது இந்த வாரத்தின் இந்திய அளவில் பிரபலமானவர்கள் யார் என்ற பட்டியலை ஐஎம்டிபி வெளியிட்டிருக்கிறது. அதன்படி லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாரா நம்பர் 1 இடத்தை பிடித்திருக்கிறார். அவருக்கு அடுத்ததாக ஷாருக்கான், தீபிகா படுகோனே, அட்லீ, விஜய் சேதுபதி (9ஆவது இடம்) பிடித்திருக்கின்றனர்.

ஒரே படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர்கள் பட்டியலில் நம்பர் 1 இடத்தை பிடித்திருப்பதால் கண்டிப்பாக அடுத்தடுத்து அவர் ஹிந்தியில் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் அவர் ஜெயம் ரவி நடிக்கும் இறைவன் படத்திலும், தனது 75ஆவது படத்திலும் கமிட்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X