சிம்பு கூடவா?: தயங்கிய நயனின் மனதை மாற்றிய பாண்டிராஜ்

By Siva

சென்னை: சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா முதலில் தயங்கினாராம்.

சிம்புவும், நயன்தாராவும் வல்லவன் படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது காதலில் விழுந்த அவர்கள் சில காலம் ஒன்றாக இருந்தனர். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

இதையடுத்து அவர்கள் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்காமல் இருந்தனர்.

பாண்டிராஜ் படம்

பாண்டிராஜ் படம்

சிம்பு பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படத்திற்கு அவருக்கு ஏற்ற ஜோடியை தேடி வந்தார்கள். இந்நிலையில் இந்த கதைக்கு நயன்தாரா தான் பொருத்தமாக இருப்பார் என்ற முடிவுக்கு வந்தார் பாண்டிராஜ்.

நயன்

நயன்

பாண்டிராஜ் தனது படத்தின் ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் மூலம் நயன்தாராவை அணுகி தான் இயக்கும் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்குமாறு கேட்டுக் கொண்டார். கதை பிடித்துவிட்டபோதிலும் முன்னாள் காதலருடன் நடிக்க நயன் முதலில் தயக்கம் காட்டியுள்ளார்.

ரன்பீர்-தீபிகா

ரன்பீர்-தீபிகா

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரும், நடிகை தீபிகா படுகோனேவும் ஒரு காலத்தில் காதலர்களாக இருந்தனர். இருப்பினும் அவர்கள் அண்மையில் ஒரு படத்தில் சேர்ந்து நடித்தனர் என்று ஒரு உதாரணத்தை நயனிடம் தெரிவித்துள்ளார் பாண்டிராஜ்.

மனம் மாறிய நயன்

மனம் மாறிய நயன்

பாண்டிராஜ் பேச்சைக் கேட்ட நயன்தாரா சிம்புவுடன் நடிக்க ஒப்புக் கொண்டார். படத்தில் மைலா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நயன்தாரா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X