அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா.. மூக்குத்தி அம்மனுக்கு எத்தனை கோடி சம்பளம் தெரியுமா?

நடிகை நயன்தாரா தனது சம்பளத்தை ரூ.5 கோடியில் இருந்து ரூ.8 கோடியாக அதிரடியாக உயர்த்தி உள்ளார்.

Recommended Video

Nayanthara Increased her salary | Mookuthi Ammanக்கு எத்தனை கோடி சம்பளம் தெரியுமா?

சென்னை: நடிகை நயன்தாரா அதிரடியாக தனது சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் நம்பர் 1 ஹீரோயினாக பல ஆண்டுகளாக நீடித்து வருபவர் நடிகை நயன்தாரா. ஆரம்பத்தில் கிளாமர் கதாபாத்திரங்களில் அதிகம் நடித்து வந்த அவர், சமீபகாலமாக தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இன்றைக்கும் நயன்தாராவின் மார்க்கெட் உச்சத்தில் தான் இருக்கிறது. சில படங்களின் தோல்விகள் கூட அவரது மார்க்கெட்டை எதுவும் செய்யவில்லை. ரஜினி, விஜய், அஜித் என தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வரும் நயன், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் தொடர்ந்து நடிக்கிறார்.

பிகில் வசூல்

பிகில் வசூல்

விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து தீபாவளிக்கு வெளியான பிகில் திரைப்படம் வர்த்தக ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் நயன்தாரா தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.

மூக்குத்தி அம்மன் சம்பளம்

மூக்குத்தி அம்மன் சம்பளம்

தற்போது அவர் ஆர்ஜே பாலாஜி இயக்கி நடிக்கும் மூக்குத்தி அம்மன் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்காக அவருக்கு ரூ.8 கோடி சம்பளம் தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னர் நயன்தாராவின் சம்பளம் ரூ.5 கோடியாக தான் இருந்தது.

ரஜினியின் தர்பார்

ரஜினியின் தர்பார்

நயன்தாரா கைவசம் தற்போது, தர்பார், நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன் ஆகிய படங்கள் உள்ளன. தர்பார் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து டப்பிங் பணிகள் நடந்து வருகின்றன. இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.

நெற்றிக்கண், வலிமை

நெற்றிக்கண், வலிமை

நெற்றிக்கண் படத்தை தயாரிப்பது நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் தான். எனவே அந்த படத்திற்கு அவர் எத்தனை கோடி சம்பளம் பெற்றுள்ளார் என்பது பரமரகசியமாகவே உள்ளது. இவை தவிர அஜித்தின் வலிமை படத்திலும் நயன்தாரா தான் ஹீரோயின் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X