என்னாது ஒரு குழந்தையைத்தான் கொஞ்சுறேனா.. உயிரையும் உலகத்தையும் நெஞ்சில போட்டுக் கொஞ்சிய நயன்தாரா!

சென்னை: மகளிர் தினத்தை நடிகை நயன்தாரா துபாயில் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கொண்டாடி தீர்த்த வீடியோக்களையும் புகைப்படங்களையும் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு எக்கச்சக்கமாக லைக்குகளை அள்ளி வருகிறார்.

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தனித்தனியாக சினிமாவில் பிஸியாக இருந்து வருகின்றனர். இருவரும் தங்களுக்கெனவும் தங்கள் குழந்தைகளுக்காகவும் நேரத்தை செலவிட முடிவெடுத்து மகளிர் தினத்தை முன்னிட்டு துபாய்க்கு விமானம் மூலம் கிளம்பிச் சென்ற புகைப்படத்தை ஷேர் செய்தனர்.

Nayanthara holds Uyir and Ulag while during car travel video makes fans very happy

விவாகரத்து வதந்தி: சினிமா பிரபலங்கள் சில நாட்கள் ஒன்றாக போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிடவில்லை என்றாலே அவர்கள் இருவரும் சீக்கிரம் விவாகரத்து செய்து விடுவார்கள் என வதந்திகள் பரவி விடுகிறது. சமந்தா மற்றும் நாக சைதன்யா சோசியல் மீடியாவில் தங்கள் விவாகரத்தை முன்னிட்டு அன்ஃபாலோ செய்ததை பார்த்த ரசிகர்கள் சமீபத்தில் நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனை அன்ஃபாலோ செய்து விட்டதை பார்த்து முடிவே கட்டி விட்டனர். ஆனால், அதுவொரு தொழில்நுட்பக் கோளாறு தான் என தெரியவந்தது. அதனை தொடர்ந்து நடிகை நயன்தாரா ஐ எம் லாஸ்ட் என ஸ்டேட்டஸ் போட்டதும் சோஷியல் மீடியாவில் அந்த வதந்தி மேலும், பரவ காரணமானது.

துபாயில் மகளிர் தினம் கொண்டாட்டம்: அதற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த இருவரும் உடனடியாக குடும்பத்துடன் துபாய்க்கு சென்று ஜாலியாக மகளிர் தினத்தை கொண்டாடிய புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார்.

ஓல்டு ஒயின்: வயசாக வயசாக உலகிலே இரண்டு விஷயங்கள் ருசி ஏறிக்கொண்டே போகும் என்று ஒயின் கிளாஸில் நயன்தாரா முகத்தை புகைப்படம் எடுத்து அந்த போட்டோக்களையும் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் ஏகப்பட்ட லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் போட்டு வருகின்றனர்.

கார் ரேஸ்: சமீபத்தில் கார் ரேஸ் அரசியல் களத்தில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், துபாய்க்கு சென்று நடிகை நயன்தாரா எஃப் 1 கார் ரேஸை விக்னேஷ் சிவனுடன் இரவு நேரத்தில் கண்டு ரசித்த வீடியோவையும் வெளியிட்டு இருந்தார்.

மார்போடு இரு மகன்களும்: நடிகை நயன்தாரா எப்போதுமே உயிரை மட்டுமே கொஞ்சுகிறார் என்றும் உலகத்தை கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறார்கள் அவர் தொடர்ந்து ஒரே மகனை மட்டும் தூக்கி வைத்துக்கொண்டு இதற்கு புகைப்படங்களை வெளியிட்டு வருவதை பார்த்து ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர். இந்நிலையில், காரில் வரும்போது இரு குழந்தைகளையும் தனது நெஞ்சோடு அணைத்துக் கொண்டு நயன்தாராவோட வீடியோவை வெளியிட்டு அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் லேடிஸ் சூப்பர் ஸ்டார்.

பாலிவுட்டில் விருது: ஷாருக்கானுடன் இணைந்து பாலிவுட்டில் நயன்தாரா நடித்த முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான தாதா சாகேப் பால்கே விருது விழாவில் விருது வென்றார். தொடர்ந்து நடிகை நயன்தாரா இந்தியிலும் நடிப்பார் என தெரிகிறது. தமிழில் இப்போதைக்கு மாதவன், சித்தார்த் உடன் இணைந்து நடித்துள்ள டெஸ்ட் மற்றும் பிளாக்‌ஷீப் யூடியூப் சேனல் பிரபலம் இயக்கி வரும் மண்ணாங்கட்டி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே. சூர்யா, க்ரித்தி ஷெட்டி நடித்து வரும் எல்ஐசி படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X