சமந்தாவை கட்டிப்பிடித்து நெகிழ்ந்த நயன்தாரா … என்ன காரணம் தெரியுமா ?
சென்னை : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சமந்தாவை கட்டிப்பிடித்து நெகிழ்ந்து போன வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
Recommended Video
தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகைகளாக திகழும் சமந்தா மற்றும் நயன்தாராவும் தற்போது நெருங்கிய தோழிகளாக வலம் வருகின்றனர்.
நயன்தாராவும் , சமந்தாவும், தமிழ், தெலுங்கு, மலையாள என பல மொழிகளில் கொடி கட்டி பறந்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் நாளுக்கு நாள் சம்பளம் ஏறிக்கொண்டே போகிறது.

காத்துவாக்குல ரெண்டு காதல்
இயக்குனர் விக்னேஷ் சிவன் சிம்புவின் போட போடி, நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். தற்போது, நடிகர் விஜய் சேதுபதி, நடிகைகள் நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோரின் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் மற்றும் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோவுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ரொமாண்டிக் காமெடி படம்
முழுக்க முழுக்க ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி உள்ள, காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ஏப்ரல் மாதம் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது.

நயன் டார்லிங்
மேலும், நயன்தாரா, தங்கம் மற்றும் வைரத்தால் ஆன கம்மல் ஒன்றை சமந்தாவுக்கு பரிசாக அளித்திருந்தார். நயன்தாரா பரிசாக அளித்த கம்மலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த சமந்தா, காதலுடன் அன்பு கண்மனி என்றும், நன்றி நயன் டார்லிங் என்றும் பதிவிட்டு இருந்தார்.
வைரலாகும் வீடியோ
இந்நிலையில் நயன்தாரா, சமந்தாவை கட்டியணைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில், காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் தான் நடித்த சீனை பார்த்த நயன்தாரா மகிழ்ச்சியின் மிகுதியால் சமந்தாவை கட்டியணைத்தபடி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. காத்துவாக்குல படத்திற்கு பிறகு இருவரும் இணை பிரியாத தோழிகளாக மாறிவிட்டனர்.


Click it and Unblock the Notifications











