இட்லிக்கடை தயாரிப்பாளர் இல்ல திருமண விழா.. நீலாம்பரியாக மாறிய நயன்தாரா.. தனுஷுக்கு நடந்த அவமானம்!

சென்னை: டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஆகாஷ் பாஸ்கரின் திருமணத்திற்கு நயன்தாரா தனது கணவரோடு சென்று இருந்தார். இதே திருமணத்திற்கு தனுஷூம் வந்து இருந்ததால், வன்மத்தை மனதில் வைத்துக்கொண்ட, நயன்தாரா அவரை அவமானப்படுத்தும் விதமாக பல செயல்களை செய்ததாக பிஸ்மி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வலைப்பேச்சு யூடியூப் சேனலில் பேசி உள்ளார். அதில், தனுஷ் நடித்து வரும் இட்லி கடை படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கர், இவர் விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குனராக சில ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார். தற்போது, இவர், அதர்வாவை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதனால், ஆகாஷ் பாஸ்கர், தனுஷ் மற்றும் நயன்தாரா என இருவருக்கும் நண்பராக இருப்பதால், இருவரையும் திருமணத்திற்கு அழைத்து இருக்கிறார்.

nayanthara dhanush akash baskaran

ஆகாஷ் பாஸ்கர் திருமணம்: இந்த திருமணத்திற்கு தனுஷ் முன்னதாகவே வந்து அமர்ந்துவிட்டார். அதன் பிறகு தான் நயன்தாரா தனது கணவரோடு வருகிறார். இதில் தனுஷூக்கு தனி இருக்கையும், நயன்தாராவிற்கு தனி இருக்கையும் போடப்பட்டு இருந்தது. நயன்தாரா வந்ததும் தனுஷை பார்த்துவிட்டு, அப்படியே கண்டுகொள்ளாதபடி, சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தியிடம் ஏதோ பேசுவது போல சென்று அங்கே போய் பேசி கொண்டு இருந்து இருக்கிறார். அப்படி பேசிக்கொண்டு இருக்கும் போதே நயன்தாரா, கல்யாண ஏற்பாட்டாளர்களை அழைத்து தனுஷ் பக்கத்தில் இருக்கை ஒதுக்கும்படி கேட்டுள்ளார்.

நயன்தாரா செய்த வேலை: இதையடுத்து, திருமண ஏற்பாட்டாளர் தனுஷின் அருகில் சோபாவை போட்டுள்ளனர். அதன்பின் அங்கு சென்று அமர்ந்த நயன்தாரா, தனுஷை அவமானப்படுத்தும் வகையில் படையப்பா படத்தில் வரும் நீலாம்பரி போல கால் மேல கால் போட்டுக்கொண்டு அமர்ந்து இருக்கிறார். நயன், தனுஷ் மோதலுக்கு இடையே இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டதால் இந்த வீடியோ இணையத்தில் மிகபெரிய அளவில் வைரலாகி ஆகாஷ் பாஸ்கர் கல்யாணம் என்பதே மறந்து போய், நயன், தனுஷ் மோதல் வீடியோவாக மாறிவிட்டது. இதில் இருந்து நயன்தாரா தனுஷ் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் என்பது தெரிகிறது என வலைப்பேச்சு பிஸ்மி அந்த வீடியோவில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X