எல்லாத்துக்கும் காரணமே சிம்புதான்.. நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவன் பேச்சு!
சென்னை: அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள டிராகன் படம் வரும் 21ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. பத்தில் பிரதீப் ரங்கநாதன், மிஷ்கின், விஜே சித்து உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று அதாவது, பிப்ரவரி 13ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இயக்குநரும் பாடல் ஆசிரியருமான விக்னேஷ் சிவன், சிம்பு குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டார். இது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
லவ் டுடே படத்திற்கு பின்னர் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்து வெளியாகவுள்ள படம் டிராகன். இந்தப் படத்தில் அவருடன், அனுபமா பரமேஸ்வரன், கயடு லோஹர், ஹர்ஷத், கவுதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், சித்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. அஸ்வத் மாரிமுத்து இதற்கு முன்னர் ஓ மை கடவுளே படத்தை இயக்கியுள்ளார் என்பதால் இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. காதலர் தினத்திற்கு படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்த நிலையில், விடாமுயற்சி படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆனதால், டிராகன் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.

படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய, இயக்குநரும் பாடலாசிரியருமான விக்னேஷ் சிவன் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். எனக்கு இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவை குறும்படங்கள் எடுத்த காலகட்டத்தில் இருந்தே தெரியும். பிரதீப் ரங்கநாதன் எனது படத்திலும் கதாநாயகனாக நடித்து வருகிறார். இசையமைப்பாளர் லியோன் இசையில் இதற்கு முன்னர் நான் எழுதிய பாடல் வரிகளை எனக்கே தெரியாமல் மாற்றி விட்டார். திமிரு காட்டாதடி பாடலை நான் எழுதும் போது முதலில், ஃபிலிம் காட்டாதடி என்றுதான் எழுதினேன். ஆனால், லியோன் அதனை திமிரு காட்டாதடி என மாற்றி பாடலை உருவாக்கிவிட்டார். ஆனால் டிராகன் படத்தில் நான் எழுதிய பாடலை திருத்தம் எதுவும் செய்யாமல் உருவாக்கியுள்ளார்.
போடா போடி: போடா போடி படத்தில் மாட்டிக்கிட்டேன் என ஒரு பாட்டு வரும். அந்த பாடலை எங்களால் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு எடுக்க முடியவில்லை. அப்படி இருக்கும்போது, சிம்பு சார் என்னைக் கூப்பிட்டு, டேய் விக்கி நீ பாட்டு எல்லாம் நல்லாதான் எழுதுற, ஆனா அதுல மாட்டிக்கிட்டேன் ஒரு வார்த்தையை எழுதி, இப்ப பாரு ஒன்றரை வருடங்களாக பாடலை எடுக்க முடியவில்லை எனக் கூறினார்.
சிம்பு: அதில் இருந்து எந்த பாடல் எழுதினாலும், கவனமாக எழுதுவேன். நான் பாடல் எழுத தொடங்கியபோது, சிம்பு சார்தான், நீ நல்லா எழுதற, நீயே பாட்டு எழுது என ஊக்குவித்தார். ஆரம்பம் படத்தில் எல்லாமே இனி மேல் நல்லாதான் நடக்கும் என எழுதிய பின்னர் தான், எனக்கு படம் கமிட் ஆனது. எனது வாழ்க்கையையே மாறியது” என பேசியுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் நயன்தாராவின் கணவரான விக்னேஷ் சிவனுக்கு சிம்பு அட்வைஸ் எல்லாம் கொடுத்துள்ளாரே என பலரும் இணையத்தில் பேசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











