நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. யப்பா 39 வயதில் செம செட்டில்

சென்னை: விக்னேஷ் சிவன் கோலிவுட்டின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவர். இயக்குநராக மட்டுமின்றி பாடலாசிரியராகவும் தனது தடத்தை ஆழமாகவே பதித்திருக்கிறார். அவர் நடிகை நயன்தாராவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு உயிர், உலக் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் விக்னேஷ் இன்று தனது 39ஆவது பிறந்தநாளை கொண்டாடிவரும் நிலையில் அவரது சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

சினிமாவில் தனக்கென இடம் பிடிப்பதற்கு நீண்ட காலம் காத்திருந்தவர் விக்னேஷ் சிவன். கடந்த ஆம் ஆண்டு சிம்புவை வைத்து போடா போடி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார் அவர். அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றாலும் துப்பாக்கி படத்துக்கு போட்டியாக களமிறங்கியதன் காரணமாக பெரிதாக கொண்டாடப்படவில்லை. ஆனாலும் 27 வயது இளைஞர் படம் இயக்கியதுபோல் இல்லாமல் ஒரு அனுபவசாலியின் மேக்கிங் அந்தப் படத்தில் புலப்பட்டது.

vignesh shivan nayanthara


நானும் ரௌடிதான்: போடா போடி படத்துக்கு பிறகு நானும் ரௌடிதான் படத்தை இயக்கினார். அந்தப் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் மெகா ஹிட்டானது. மேலும் ரவுடி ஜானரில் உருவான கதையில் திகட்டாத காமெடியை வைத்து அனைவரது வயிறுகளையும் பதம் பார்த்து தனக்கென தனி இடத்தை பிடித்தார். அதற்கு பிறகு அவர் இயக்கிய தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்கள் சுமாரான வரவேற்பை பெற்றது. இப்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து லவ் இன்ஸூரன்ஸ் கம்பெனி என்ற படத்தை இயக்கிவருகிறார்.

இயக்குநர் மட்டுமில்லை: விக்னேஷ் சிவன் இயக்குநராக மட்டுமின்றி பாடலாசிரியராகவும் தனது தடத்தை பதித்திருக்கிறார். என்னை அறிந்தால் படத்தில் இடம்பெற்ற அதாரு அதாரு, வணக்கம் சென்னை படத்தில் இடம்பெற்ற எங்கடி பொறந்த, என் ஜிகே படத்தில் இடம்பெற்ற திமிரணும்டா என பல படங்களுக்கு பாடல்களை எழுதியிருக்கிறார். மேலும் வேலையில்லா பட்டதாரி படத்தில் நடிகராகவும் தோன்றியிருக்கும் அவர்; ஈவெண்ட்டுகளை நடத்திக்கொடுப்பதிலும் கெட்டிக்காரராக இருக்கிறார். தமிழ்நாடு அரசு நடத்திய செஸ் ஒலிம்பியாட் தொடக்க மற்றும் இறுதி விழா உள்ளிட்டவைகளையும் இயக்கியிருக்கிறார்.

திருமணம்: நானும் ரௌடிதான் படத்தில் பணியாற்றியபோது நயன்தாராவுடன் காதல் ஏற்பட்டது. பல வருடங்கள் லிவிங்கில் வாழ்ந்த அவர்கள் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். இருவருக்கும் உயிர், உலக் என்ற மகன்கள் இருக்கிறார்கள். இரண்டு பேருமே உச்சக்கட்ட காதலோடு வாழ்க்கையை நகர்த்திவருகிறார்கள். மேலும் நயன் ஆரம்பித்திருக்கும் பல பிஸ்னெஸ்களில் விக்னேஷ் சிவன் பங்குதாரராக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விக்னேஷ் சிவனின் சொத்து மதிப்பு: இந்நிலையில் விக்னேஷ் சிவன் இன்று தனது 39ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவரும் சூழலில் அவரது சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி ஒரு பாடல் எழுதுவதற்கு மூன்று லட்சம் ரூபாய்வரையும், ஒரு படம் இயக்குவதற்கு நான்கு கோடி ரூபாய்வரையும் சம்பளமாக விக்கி பெறுகிறாராம். மேலும் சில தொழில்களையும் செய்துவரும் அவருக்கு மொத்தம் 55லிருந்து 60 கோடி ரூபாய்வரை மொத்த சொத்து மதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது தவிர்த்து நயன் தொடங்கியிருக்கும் சில பிஸ்னெஸ்கள் விக்னேஷ் சிவனின் பெயரில்தான் இருக்கின்றனவாம். அந்த பிஸ்னெஸ்களிலிருந்தும் வருமானம் கொட்டுகிறதாம். மேலும் நயன்தாராவுக்கு மட்டும் 170 கோடி ரூபாய்வரை சொத்து இருக்கிறது. ஆகமொத்தம், நயன் - விக்னேஷ் சிவன் ஆகியோரது சொத்து மதிப்பை சேர்த்தால் மொத்தம் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வரும் என்கிறார்கள் திரைத்துறையினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X