விக்னேஷ் சிவனின் கிரிஞ்ச் போஸ்ட்… இணையத்தில் கலாய்க்கும் ரசிகர்கள்!

சென்னை: விக்னேஷ் சிவன், நயன்தாரா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழில் போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைவுலகிற்கு இயக்குநராக அறிமுகமானவர்தான் விக்னேஷ் சிவன்.

இவர் தொடர்ந்து, சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம், நானும் ரௌடி தான், காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற திரைப்படங்களை இயக்கி இருந்தார்.

Nayanthara husband vignesh shivan latest instagram pics

விக்னேஷ் சிவன்-நயன்தாரா: இவர் நானும் ரெளடி தான் படத்தில் நயன்தாரா நடித்ததன் மூலம் இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதன்பின் கடந்த ஆண்டு நடிகை நயன்தாராவை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் மகாபலிபுரத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணம் அந்த நான்கு மாதத்திலேயே வாடகைத் தாய் முறையில் இரட்டைகுழந்தைக்கு தாய் ஆனார்.

நான் வந்துட்டேன்னு சொல்லு: குழந்தைகளின் முகத்தை மீடியாவில் காட்டாமல் இருந்த தனது ரசிகர்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருக்கும் விதமாக, பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்கிறார். நயன்தாரா இன்ஸ்டாகிராம் கணக்கைத் தொடங்கினார். அப்போது, நான் வந்துட்டேன்னு சொல்லு என ரஜினி வசனத்துடன் தன் இரட்டை குழந்தைகள் உயிர் மற்றும் உலக் இருவரின் முகத்தையும் வீடியோவில் வெளியிட்டு இருந்தார். இத்தனை நாட்களாக சமூக வலைதளங்களில் இருந்து ஒதுங்கியே நயன்தாரா சோஷியல் மீடியாவில் என்ட்ரி கொடுத்ததால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கிரிஞ்ச் போஸ்ட்: இந்த நிலையில் விக்னேஷ் சிவன், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் the incredibles என எடிட் செய்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிலர் என்ன இதுஎன்றும் கிரிஞ்ச் போஸ்ட் என்றும் கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். தற்பொழுது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜவான்: ஜவான் படத்தின் மூலம் நயன்தாரா பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார். இப்படம் வெளியாகி இன்றுடன் பத்தாவது நாள் நிறைவடையும் நிலையில் இப்படம் ரூ.797.50 கோடியை கோடியை வசூல் செய்துள்ளது. இதன் மூலம் ரூ.800 கோடியை நெருங்க உள்ளது ஜவான் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X