நீங்கள் வேறொரு கிரகத்தில் இருந்து வந்தவர்.. பகத் பாசிலை புகழ்ந்த விக்னேஷ் சிவன்!
சென்னை: மலையாள திரைப்படங்களான மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு, ஆடு ஜீவிதம் திரைப்படம் பெரும் வசூல் அள்ளி வரலாற்று சாதனை படைத்த நிலையில், அந்த வரிசையில் ஃபஹத் பாசில் நடித்த ஆவேசம் திரைப்பட பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த படத்தைப் பார்த்த இயக்குநர் விக்னேஷ் சிவன் பகத் பாசிலை வெகுவாக பாராட்டினார்.
ரோமன்சம் என்ற பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படத்தை கொடுத்த ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஆவேசம். இப்படத்தில், பகத் பாசில், ஹிப்ட்ஸர், மிதுன், ரோஷன் ஷநவாஸ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சுஷின் ஷியாம் இசையமைத்திருக்கிறார்.

ஆவேசம் படத்தின் கதை: பெங்களூரில் உள்ள பொறியியல் கல்லூரிக்கு கேரளாவில் இருந்து மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவர்கள் தங்களுக்கு என்ற ஒரு கேங்கை அமைத்துக் கொண்டு ஜாலியாக அரட்டை அடித்துக்கொண்டு ஜாலியாக இருக்கும் போது, இவர்கள் அனைவரும் சந்தோஷமாக இருப்பதை பார்த்து கடுப்பான கல்லூரியின் சீனியர் மாணவர்கள் அவர்களுக்கு பல பிரச்சனைகளை தருகிறார்கள். இதை அந்த கேங்கில் உள்ள மூன்று மாணவர்கள் அந்த சீனியர்களை எதிர்த்து கேள்வி கேட்கிறார்கள்.
மிரட்டலான நடிப்பு: இதனால் ஆத்திரம் அடைந்த சீனியர்கள் அந்த மூன்று நபரையும் ஒரு ரூமில் அடைத்து வைத்து பயங்கரமாக தாக்கி துன்புறுத்துகிறார்கள். இதனால், ஆத்திரமடைந்த ஜூனியர் மாணவர்கள் அந்த சீனியர்ளை அடிக்க வேண்டும் என்று முடிவு எடுக்கிறார்கள். அப்போது தான் அந்த ஏரியாவின் டான் பகத் பாசில் உடைய அறிமுகம் கிடைக்கிறது. இவருடைய நட்பாக பழகும் அந்த 3 மாணவர்கள் சீனியர்களை பகத் பாசிலை வைத்து அடிக்க வைக்கிறார்கள். அந்த மூன்று மாணவர்களுக்கும் பகத் பாஸில் மூலமே பிரச்சனை வருகிறது. அது என்ன பிரச்சனை? அந்த பிரச்சனையை மாணவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதுதான் இந்த படத்தின் கதை.
வசூல் சாதனை: இத்திரைப்படம் ஏப்ரல் 11ந் தேதி தியேட்டரில் வெளியாகி வசூலை அள்ளியது. இந்த படம் முதல் நாளில் இந்தியளவில் 3.65 கோடி வசூல் செய்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாள் 3 கோடியை வசூல் செய்தது. வேறும் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் வெளியாகி 9 நாட்களாகி உள்ள நிலையில், 59 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால், படத்தின் வசூல் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாராட்டிய விக்னேஷ் சிவன்: இந்த படத்தில், கல்லூரி மாணவர்கள் செய்யும் சேட்டை, அட்ராசிட்டியாக இருக்கிறது. பகத் பாஸில் வழக்கம் போல இந்த படத்திலும் பின்னி பெடல் எடுத்து இருக்கிறார். இந்நிலையில், இப்படம் பார்த்த இயக்குனர் விக்னேஷ் சிவன் பகத் பாசிலை பாராட்டி உள்ளார். அதில் படம் பார்த்து மிகவும் வியப்படைந்தேன். பகத் பாசில் சார் நீங்கள் வேறு கிரகத்தில் இருந்து வந்துள்ளீர்கள். படத்தின் கதை சிறப்பாக எழுதப்பட்டு, அற்புதமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. மலையாள சினிமா, அனைத்தையும் அடித்துத் நொறுக்குகிறது. இப்படிப்பட்ட படத்தை எடுத்ததற்காக படக்குழுவிற்கும்பகத் பாசில் சாருக்கும் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
வேட்டையன்: ரஜினி நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் படத்தில் பகத் பாசில் ரஜினியின் மகன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ராணா வில்லன் வேடத்தில் நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தின் ஷுட்டிங் தற்போது மும்முரமாக நடந்து வரும் நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் பட்டையை கிளப்பியது.


Click it and Unblock the Notifications











