மோகன் ராஜா இயக்கும் லூசிஃபர் ரீமேக்கில் நயன்தாரா.. வில்லனுக்கு மனைவியாக நடிக்கிறாரா?
சென்னை: மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான லூசிஃபர் படத்தின் ரீமேக்கில் நயன்தாரா நடிப்பதாகக் கூறப்படுகிறது.
மோகன்லால் நடித்து மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான படம், லூசிஃபர். இதை நடிகர் பிருத்விராஜ் இயக்கி இருந்தார்.
இந்தப் படம் தமிழில் டப் ஆகி வெளியானது. மஞ்சு வாரியர், விவேக் ஓபராய், டோவினோ தாமஸ், சாய்குமார் உட்பட பலர் இதில் நடித்திருந்தனர்.

வசூல் சாதனை
மலையாளத்தில், வசூல் ரீதியாக சாதனைப் படைத்த படம் இது. அங்கு 200 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம் இது என்கிறார்கள். தான் இயக்கிய முதல் படம் சூப்பர் ஹிட்டானதால் நடிகர் பிருத்வி ராஜ் உற்சாகமாக இருக்கிறார். அடுத்தும் அவர் படம் இயக்க இருக்கிறார்.

ரீமேக் உரிமை
இந்நிலையில், லூசிஃபர் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை, மெகா ஸ்டார் சிரஞ்சீவி வாங்கியிருந்தார். இந்தப் படத்தை விவி விநாயக் இயக்குவார் என முதலில் தகவல்கள் வெளியாயின. பின்னர், சாஹோ படத்தை இயக்கிய சுஜீத் இயக்குவார் என்று கூறப்பட்டது.

மோகன் ராஜா
பின்னர் அவர் விலகி விட்டதாகவும் விவி விநாயக்கே இயக்குவார் என்றும் கூறப்பட்டது. ஆனால், இயக்குனர் மோகன் ராஜா இயக்குவதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. தெலுங்கில் இருந்து பல படங்களை தமிழில் ரீமேக் செய்துள்ள மோகன் ராஜா, இந்தி படமான அந்தாதுன் தமிழ் ரீமேக்கை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.

காஜல் அகர்வால்
இந்நிலையில் அந்தப் படத்தில் இருந்து அவர் திடீரென விலகினார். இப்போது நடிகர் சிரஞ்சீவி ஆச்சாரியா படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு லூசிஃபர் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார்.

வில்லன் மனைவி
இந்நிலையில் இந்தப் படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. அதாவது அவர் முதலமைச்சரின் மகள் வேடத்தில் நடிக்கிறாராம். ஒரிஜினலில் அந்த கேரக்டரில் மஞ்சுவாரியர் நடித்திருந்தார். வில்லன் மனைவியாக நடித்திருந்தார். அந்த கேரக்டரில் நயன்தாரா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











